இன்று உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த மக்கள் தொகையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நோய்களின்

எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இவ்வாறு இந்திய மக்களை குறிப்பாக தென்னிந்திய மக்களை அவதியுறவைக்கும் நோய்களில் சர்க்கரை நோயும்,இரத்த அழுத்த நோயும் தான் முதலிடம் வகிக்கிறது. இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக இந்திய மக்களை ஆட்டிப் படைக்கின்றன.

இன்று 63 சதவிகிதமாக உள்ள நீரிழிவு நோயாளியின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் உணவு முறையே. மேலும் நகர வாழ்க்கையின் தாக்கமும் ஒரு காரணம். போதிய உடற் பயிற்சியின்மை என பல பாதிப்புகளின் வெளிப்பாடே நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது.

ஒரு குழந்தை இளம் வயதிலிருந்து வாலிப பருவத்திற்கு மாறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாளமில்லா சுரப்பி மண்டலம்தான். இதை ஆங்கிலத்தில் எண்டோகிரைன் சிஸ்டம் என அழைப்பõர்கள். இந்த நாளமில்லாச் சுரப்பிகள் தான் மனித உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. இந்த ஹார்மோன்களின் சுரப்பானது வாதபித்த கபத்தை பொறுத்தே அமைகின்றன. இந்த மூன்றில் எதனுடைய நிலையில் மாறுபாடு ஏற்பட்டாலும் முதலில் பாதிக்கப்படுவது ஹார்மோன்களே. வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கிய பங்கு வகிப்பது ஹார்மோன்கள் ஆகும். உடலுக்கு தேவையான சர்க்கரை அதாவது இன்சுலினை சுரக்கும் கணையம் பாதிக்கப்படுவதால் உடல் பருமன் ஏற்பட்டு நீரிழிவு நோய் உருவாக காரணமாகிறது.

இந்த நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும்கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே.

முறையான உணவுதேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

கீழ்கண்ட உணவு முறைகளை தவறாமல் கடைப்பிடித்து வருவது நல்லது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்

கத்தரி பிஞ்சுசுரைக்காய்முட்டைகோஸ்முள்ளங்கிவெண்டைக்காய்கோவைக்காய்பீன்ஸ்சாம்பல் பூசணிபுடலங்காய்வாழைத்தண்டுகாளி பிளவர்வெண்பூசணிபாகற்காய்வாழைப்பூகாராமணி,கொத்தவரங்காய்வெங்காயம்பீர்க்கங்காய்வாழை பிஞ்சுநூல்கோல்முருங்கைக் காய்வெள்ளரிக்காய்சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலைஇஞ்சிகொத்தமல்லிபுதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.

நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள் 

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு.

கறிவேப்பிலைதூதுவளைக் கீரைஆரைக்கீரைமுசுமுசுக்கைக் கீரைவெந்தயக் கீரைதுத்திக் கீரைமுருங்கைக் கீரைமணத்தக்காளிக் கீரைஅகத்திக் கீரைசிறுகீரைஅரைக்கீரைவல்லாரைக் கீரை,கொத்தமல்லிக் கீரை

இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம்அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.