சில பெ‌ண்களு‌க்கு மாத‌ந்தோறு‌ம் ஏ‌ற்படு‌ம் மாத‌வில‌க்கு சமய‌த்‌தி‌ல் அ‌திக‌ப்படியான உ‌திர‌ப் போ‌க்கு ஏ‌ற்படு‌ம். இதனை‌த் தடு‌க்க எ‌ளிய கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு ஆ‌கியவ‌ற்றை சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம்
தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்து வர வே‌ண்டு‌ம்.

இ‌ப்படி கொடு‌த்து வ‌ந்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும்.

இதே‌ப் போல மூலக் கடுப்பு‌க்கு‌ம், உடல் சூ‌ட்டை‌த் த‌ணி‌க்கவு‌ம், வாந்தி, மயக்கத்தை போ‌க்கவு‌ம் மாதுள‌ம் பூ‌ச்சா‌ற்றை க‌ற்க‌ண்டுட‌ன் சே‌ர்‌த்து சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் ‌‌விரை‌வி‌ல் நோய் தீரும்.

Sourch: Webduniya