மார்பகப்புற்று நோய் என்பது பெண்களில் ஏற்படும் பொதுவான வகை புற்றுநோயாகும். பெண்களில், மரணத்தை ஏற்படுத்தும் புற்றுநோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.

அறிகுறிகள்

 • மார்பு வீங்குதல்
 • மார்புக் காம்பிலிருந்து வடிதல்
 • மார்பகக் காம்பு உள் நோக்கி இழுத்தல்
 • சிவந்த / வீக்கமடைந்த மார்புக் காம்பு
 • மார்பகம் பெரியதாகுதல்
 • மார்பு சுருங்குதல்
 • மார்பகம் கல்போல் கடினமாதல்
 • எலும்பு வலி
 • முதுகு வலி

இடர் காரணிகள்

 • குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மார்பக புற்று நோய் இருத்தல் (பெரும்பாலான நெருங்கிய உறவினர்களுக்கு)
 • பெண்களுக்கு வயதாகும் போது ஆபத்து அதிகமாகிறது.
 • ஏற்கெனவே ஏற்பட்ட கர்ப்பப்பை புற்றுநோய்.
 • ஏற்கெனவே ஏற்பட்ட மார்பக புற்றுநோய், இயல்புக்கு மாறுபட்ட மாற்றங்கள், ஏற்கெனவே உள்ள மார்பக நோய்கள்.
 • மரபுவழிக் கோளாறு அல்லது மாற்றங்கள் (அரிதான மாற்றங்கள்)
 • 12 வயதிற்கு முன்பாகவே வயதுக்கு வருதல்
 • 50 வயதுக்கு மேற்பட்டு மாதவிடாய் முடிதல்
 • குழந்தை இல்லாமை.
 • மது வகைகள், அதிக கொழுப்பான உணவு, அதிக நார்பொருள் உள்ள உணவு, புகைப்பழக்கம், உடற்பருமன் மற்றும் ஏற்கெனவே உள்ள கருவக அல்லது பெருங்குடல் புற்றுநோய்.

சிகிச்சை முறை

 • மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை, மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்துள்ளது
 1. பெண்ணுக்கு மாதவிடாய் காலங்கள் நின்றுவிட்டதா?
 2. மார்பகப் புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது?
 3. மார்பகப் புற்றுநோய் செல்லின் வகை.
 • புற்றுநோய் எந்த அளவ பரவியுள்ளது என்பதை கீழ்க்கண்டவாறு வரையறை செய்யப்பட்டுள்ளது
 • புற்று நோய் எந்த இடத்தில் உள்ளது?
 • எந்த அளவு புற்றுநோய் நிணநீர் சுரப்பி கணுக்களுக்கு பரவியிருக்கிறது?
 • புற்றுநோய் மார்பகத்தின் உள்பகுதியில் உள்ள தசை வரை பரவியுள்ளதா?
 • மற்றொரு மார்பகத்திற்கும் புற்றுநோய் பரவியிருத்தல்
 • புற்றுநோய் மற்ற உடல் உறுப்புகளுக்கு பரவியிருத்தல் உ-ம் எலும்பு அல்லது மூளை

 

 • புற்றுநோய் செல்களின் வகையப் பொருத்து சிகிச்சை முறை வேறுபடுகிறது
  • மோர் ஆக்ரஸிவ் செல் (அதிக ஆக்கிரமிக்கும் செல்)
  • லெஸ் ஆக்ரஸிவ் செல் (குறைவாக ஆக்கிரமிக்கும் செல்)

மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் என்ன செய்யலாம் என முடிவு செய்வர்

 • கதிர்வீச்சு மருத்துவத்தினை பயன்படுத்தி அல்லது பயன்படுத்தாமல் வீக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களை அகற்றுவது.
 • முழு மார்பக பகுதியையும் அகற்றுவது.

தடுத்துக் காத்தல்

 • மாதாமாதம் மார்பகத்தினை தற்பரிசோதனை செய்தல்.
 • உங்கள் மருத்துவரிடம் வருடத்திற்கு ஒரு முறை சென்று மார்பகப் பரிசோதனை செய்தல்.
 • சத்தான உணவுகளை உட்கொள்ளுதல்.

உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்குமோ என சந்தேகம் ஏற்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகவும். மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய ஒன்று. ஆனால் கண்டறியப்படவில்லையென்றால் மரணத்திற்கு நேராக வழி நடத்தும்.