பாதுகாப்பான தாய்மை அடைவதற்கு அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்

  • கர்ப்பக்கால மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பேறுகாலத்தில் உள்ள கஷ்டங்களை
  • இந்த காலகட்டத்தில் தேவையான உணவுகள்
  • பேறுகாலத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உதவிகள்
  • பேறுகாலத்திற்கு தேவையான அவசர வசதிகள்
  • பேறு காலத்திற்கு பின் தேவையான வசதிகள்
பிரசவத்தின் போது தாய்க்கு ஏற்படும் மரணத்திற்கான சில காரணங்கள்


சமுக காரணங்கள்

மருத்துவ காரணம்

பிரசவத்திற்கு தேவையான வசதிகள்

  • சிறிய வயதிலேயே திருமணம்
  • அடிக்கடி குழந்தை பெறுதல்
  • ஆண்குழந்தை  வேண்டுமென   இருத்தல் 
  • ரத்த சோகை                                 
  • ஆபத்து நிறைந்த அறிகுறிகளை தெரிந்து      கொள்ளாமல் இருப்பது                                    
  • பிரசவத்தில ஏற்படும்      தடைகள்  
  • ரத்தபோக்கு அதிகமாகுதல்    
  • டாச்சிமியா        
  • தொற்றுநோய்கள் தாக்கம் 
  • பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இல்லாமை
  • மருத்துவ குழுவின் கவனக்குறைவு
  • மருத்துவ வசதி குறைவுகள்
  • மருத்துவ உதவியில் தாமதம்                               


கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை


கர்ப்பம் தரித்த நாள் முதல் பிரசவம் வரை பெண்கள் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும். மேலும் ஒரு சில மருந்துகள் இத்தகைய நேரங்களில் உடலுக்கு உகந்தது அல்ல என்பதால் நோய்வாய் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கர்ப்பமான உடனேயே சுகாதார மையத்திற்குச் சென்று பதிவு செய்தல் முக்கியம். கர்ப்ப நாட்களில் சுகாதார மையத்தில் "ஐந்து முறைப் பரிசோதனை" மிகவும் முக்கியம். எனவே, இப்பரிசோதனைகளுக்கு, கர்ப்பிணி பெண்கள் சுகாதார மையத்திற்கு குறிப்பிட்ட நாட்களில் கட்டாயம் செல்ல வேண்டும்.

அளவுக்கு அதிகமான ரத்தப் அழுத்தம், சிறுநீரில் உப்புச்சத்து காணப்படுதல், கைகால் மற்றும் முகத்தில் வீக்கம் போன்றவை ஆபத்தான "டாக்ஸீமியா" வுக்கு அறிகுறிகள்.

சுகாதார பழக்கங்கள்
தினமும் இருமுறை சோப்பு போட்டு குளித்து சுத்தமாக இருப்பதால் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம். கடினதன்மை உடைய சோப்புகளை உபேயாகிக்க கூடாது. சரியான பொருத்தமான உள் ஆடைகளை அணிய வேண்டும்

பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள்

  • ரத்தம் கலந்த நீர்கசிவு ஏற்படுவது
  • அடிவயிற்றில் வலி ஏற்படுவது
  • தொடர்ந்து நீர் கசிவு ஏற்படுவது

 ஆபத்திற்கான அறிகுறிகள்

  • அதிக அளவில் இரத்த போக்கு ஏற்படுவது
  • கடுமையான தலைவலி மற்றும் கண் இருட்டுதல்
  • மயக்கமான உணர்வு அல்லது வலிப்பு
  • 12 மணி நேரம் வலி தொடர்ந்து இருத்தல்
  • பிரசவம் ஆன அரை மணி நேரத்திற்கும் பிறகும் நஞ்சுக் கொடி (பிளசென்டா) வராமல் இருத்தல்
  • குறை பிரசவம் ஏற்படுதல்(மாதங்கள் ஆவதற்க்கு முன் குழந்தை பிறப்பது)
  • தொடர்ந்து ஏற்படும் வயிறுவலி

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகள்

  • காய்ச்சல் அல்லது வயிறு வலி இருக்கும் போது
  • மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்படும்போது
  • கருவின் அசைவு குறைந்து காணப்படும்போது
  • அதிக அளவில் வாந்தி ஏற்பட்டு எதுவும் சாப்பிட முடியாத சூழ்நிலையில்

இரத்தம் தேவைப்படும் போது தயார் தநிலையில் இருப்பது


பிரசவ நேரத்தில் அதிக அளவில் இரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுவது நிகழ்கிறது. இந்த சூழ்நிலையில் இரத்தத்தின் வகை தெரிந்து கொண்டு அதே வகை ரத்தத்தை ஏற்றிக் கொள்வது ஆபத்தை தவிர்க்க உதவும்.


பிரசவத்திற்கு பின் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்


பிரசவத்திற்கு பின் 50% உயிரிழப்புகள் நேரிடுவதை பரிசோதனைகள் தெரிவிக்கின்றது. பிரசவத்திற்குப் பின் 1 வார கால கட்டம் மிக முக்கியமானது. கர்ப்பபை, சிறுநீர்பை இவைகளில் தொற்று நோய் தாக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்படும் சூழநிலையில் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.


பிரசவத்திற்கு பின் காணப்படும் ஆபத்தான அறிகுறிகள்


  • மயக்கம் மற்றும் வலிப்பு வருதல்
  • அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது
  • காய்ச்சல்
  • அடிவயிற்றில் வலி ஏற்படுவது
  • வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு
  • வலி வீக்கம் ஆகியவை காலிலோ அல்லது மார்பிலோ காணப்படுகிறது
  • சிறு நீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது
  • கண்இமை நாக்கு உள்ளளங்கை வெளிரி காணப்படுவது

பிரசவத்திற்கு பின் மருத்துவமனைக்கு செல்வது


பிரசவத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு செல்வது அவசியம். குழந்தை மற்றும் தாய் சரியாக உடல் பரிசோதனை செய்துகொள்ளுதல் அவசியம்.

உணவு
மற்றும் ஓய்வு

பிரசவத்திற்கு பின் பெண்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு போதுமானவரை ஓய்வு எடுத்துக் கொண்டால் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும். இரும்புசத்து மாத்திரையை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த சோகை வராமல் தடுக்க இயலும். பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை உண்ண வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். தானியங்கள், பால், கீரைவகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கூட அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். சரியான அளவிற்கு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான வேலைகள் தவிர்க்க வேண்டும்.

சுகாதாரம்

தினமும் இருமுறை குளிப்பதும் இயற்க்கை கழிப்பிற்கு பின் சோப் உபேயாகித்து கைகால்களை சுத்தம் செய்வதும் ரத்தப் போக்கு இருப்பின் சுத்தமான சானிடரி நாப்கின்களை உபேயாகப்படுத்துவதும் பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 4-6 மணி நேரங்களுக்கு ஒருமுறை நாப்கின்களை மாற்றிக் கொள்வதும் அவசியம். குழந்தையை எடுத்துக் கொள்ளும் போதோ அல்லது பால் அளிக்கும் போதோ கைகளை சுத்தமாக கழுவி பின்பே எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சேயின் நலத்தை காத்துக் கொள்ள முடியும்.