1. வைத்தியம் செய்யப்படாத சக்கரை வியாதியோ அல்லது சக்கரை நோய் சிகிச்சையில் சரி வர அக்கறை செலுத்தாமல் இருந்தால் என்ன ஏற்படும் என்று சுருக்கமாக, ஆனால் முக்கியமான குறிப்புகளை, கீழே எழுதி இருக்கிறேன்.

2.
சக்கரை வியாதி கண்டு பிடிக்கப்பட்ட நாளிலிருந்தே கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். மாத்திரையால் சக்கரை வியாதி குறையவில்லையெனில் இன்சுலினுக்கு மாறிவிடுவது சிறந்தது. இன்சுலினுக்கு மாறுவது அவசியமா என்பதை உங்கள் டாக்டரிடம் அவசியம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.

3. சக்கரை வியாதிக்கு தொடர்ந்து மருத்துவம் செய்வது மிக அவசியம்.

4. கொழுப்புச்சத்து, சிறுநீரகம், கண் மற்றும் கால்களை குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது அவசியம்.

5. சொந்தமாக ரத்த சக்கரை சோதிக்கும் மிஷின் வாங்கி ஒரு நோட்டுப் போட்டு சக்கரை அளவைச் சோதித்துக் குறித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. Now-a-days these machines are easily and cheaply available. Easy to use as well.

A.
சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடும்; ஆனால் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழப்பது தெரியாமல் போய்விட கூடும் என்பதால், செலவை பாராமல் தொடர் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

B.
சக்கரை வியாதி நரம்புகளை மறக்க செய்வதால், புண் ஏதும் ஏற்பட்டால் இலகுவாக ஆறாது. நிறைய பேருக்கு கால்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆகையால் கால் பரிசோதனை செய்ய வேண்டும்.
.
C.ஆரம்பத்திலிருந்தே கண் பரிசோதனை செய்து கொள்வது கண்ணில் கோளாறு வராமல் தடுக்க ஏதுவாக இருக்கும்.
D.சக்கரை வியாதியோடு, கொழுப்பு சத்தும், இரத்த அழுத்தமும் அதிகமாக இருக்குமேயானால் மிகவும் ஆபத்து. பக்க வாதம் அடிக்க அதிக வாய்ப்பு உள்ளதால், தொடர் சிகிச்சை செய்வது அவசியம்.
குடும்பத்தில்
(தாய், தந்தை) சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதிகம் இந்த நோய் வரக் கூடும் என்பதால் அளவாக உணவையும் அதிகமாக உடற்பயிற்சியும் செய்து கொண்டால் வியாதி வருவது தள்ளி போக கூடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அல்லாஹ் நன்கு அறிந்தவன்

அபூஹுரைரா
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
புகாரி 5678

Thanks to :

Dr.Ajmal Khan Kudlebbai MBBS MRCPsych
Senior Medical Officer
Department of Psychiatry
RIPAS Hospital .Brunei