வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள்

April 29, 2010
வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.

குழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமானாலும் வெங்காயத்தின் உதவிதான் தேவை.

சிலவகை உணவுக்கு ருசி சேர்ப்பதே வெங்காயம்தான்.

வெங்காய சாம்பாரின் ருசியறியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? வெங்காய காரக் குழம்பின் சுவைக்கு நிகர் ஏது?

வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி, தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப் பட்டியலே ஒரு முழு நூலாகிவிடும்.

வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி, அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது பாரத நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு.

உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர். பக்தி பூர்வமாகச் செய்யப்படும் பெரிய பூஜைகளின்போது வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் பூசனைக்குரிய மூர்த்திகள் போன்ற மதிப்புடன் மரியாதையுடன் பூஜையில் இடம் பெறுவது வழக்கமாம்.

பண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத் தரப்பட்டிருந்தது.

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...

வெங்காயத்தில் வைட்டமின் ‘சி’ சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் இந்தச் சத்து அதிகமாக உண்டு.

பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.

உடல் பருமனைக் குறைக்க....

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அழகாக மாற உதவும்...

இரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக வெங்காயம் உதவுகிறது.

உஷ்ணக் கடுப்பு அகல

பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.

சாதாரண தலைவலிக்கு

சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.

விசக் கடிக்கு

வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.

இருமலுக்கு

பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.

மூளையின் சக்தி பெருகும்

மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது.

ஆகவே தினமும் வெங்காயத்தை ‘சூப்’பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.

பல்வலி, ஈறு வலி

பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.

பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை

பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளை ஒழுக்கிற்கு, வெள்ளைப் பூண்டை தோல் நீக்கி 100 கிராம் அளவு சேகரித்து சாறு எடுத்து பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு கொடுக்க குணம் தெரியும்.

உடல் அயர்வும் வலியும் நீங்க

அரைக் கீரையுடன் பூண்டும், மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து இரவு நேரத்தில் சாப்பிட உடலில் தோன்றும் அயர்வும், வலியும் நீங்கி உடல் இலேசாகவும் சுகமாகவும் ஆகிவிடும்.

குடல் புழுக்கள் நீங்க

குழந்தைகளில் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை, வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அதைச் சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.

பால் சுரப்புக்கு

குழந்தைப் பேறுக்குப் பிறகு சில தாய்மார்களுக்கு போதிய அளவு பால் சுரக்காமல் இருந்து விடுவதுண்டு

பசுவின் பாலில் இரண்டொரு வெள்ளைப் பூண்டு பற்களைப் போட்டு காய்ச்சி பூண்டை சாப்பிட்டு பாலை குடித்து விட வேண்டும்.
 

ஹார்ட் அட்டாக்கில் இறப்பெய்துபவரை 5 நிமிடங்களுக்குள் முதலுதவி செய்தால் காப்பாற்ற வாய்ப்பு உண்டு

April 29, 2010
நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென நெஞ்சைப் பொத்திக் கொண்டு துடிக்கிறார். அவருக்கு ஏற்கனவே இருதய வருத்தம் இருப்பது உங்களுக்குத் தெரியும். இது மாரடைப்பு என்பது ...
Continue reading...
 

There is no equality between genders in Islam, as Islam gives men the right to have more than one wife, but does it not give the same right to women to have more than one husband.

April 27, 2010

Reply: Islam does not approve of polyandry, i.e., a woman taking up more than one husband. It is the male whose children the women bear. If a woman had multiple husbands, it would not be easy to know who is the biological father of the child. When a child is conceived, God puts love and affection in the hearts of the parents so that they can bring up the child. Without this love, life cannot be sustained. But if there was dispute about who really has fathered the child, there would be no love...


Continue reading...
 

It is not civilized to have more than one wife at a time.

April 27, 2010

Reply: The only religious book that says: "... then marry only once" is the Quran, the holy book of the Muslims. This injunction is not found in the Christian Bible in the Hindu Geeta, or in the Jewish holy book etc. In the Bible there are so many references to various prophets and kings who had numerous wives. Abraham had three wives, while King Solomon had seven hundred wives, etc. In the Hindu literature the various gods have hundreds of wives. Krishna had one thousand women and concubines...


Continue reading...
 

தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை! – Part 1

April 10, 2010

இக்கால நாகரீக உலகில் மனிதனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளும், உபயோகிக்கும் பொருள்களும் ஏராளமாகப் பெருகியிருக்கின்றன. விதவிதமான ஆயத்த ஆடைகள், (Ready mades); கலைநயம் மிக்க சேலைகள்! கண்கவரும் ஆபர...


Continue reading...
 

தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை! – Part 2

April 10, 2010
இத்தொடர் ஆய்வுக்கட்டுரையின் முதல் பகுதியில் பொதுவாக மக்கள், குறிப்பாக பொருள்களை வாங்கிக் குவிக்கும் அடங்கா ஆசை கொண்டவர்கள் (compulsive shopping nature), பொருள்களின் மீது மிகுந்த ஆசையுடையவர்களாகவும்...
Continue reading...
 

Grand opening of the Manba Ul Ula School's New Classroom Block

April 10, 2010
Mr.Justice. G.M.Akbar Ali, Judge Madras High Court,
will be opening the Manba Ul Ula School New Classroom Block
on 3rd May 2010.
 
This is requested to be posted in all koothanallur Websites .
We request to you to forward this message to all our Koothanallur Brothers.
 
Information received from
Management Committee
Manba Ul Ula Society
Koothanallur.

News source: Mr.L M B Mohamed Saleem

Continue reading...
 

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வி

April 10, 2010

ஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வி, விளையாட்டு மற்றும் தங்கும் விடுதிக்கான சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது.

2010 – 2011
கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட...


Continue reading...
 

விதியின் அமைப்பு ஓர் நினைவூட்டல்

April 10, 2010

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

நான் ஒரு நாள் வாகனத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்பொழுது அவர்கள் சிறுவரே! உமக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிரேன்.
அல்லாஹ்வின் ...


Continue reading...
 

The Right of Children to Free and Compulsory Education Act

April 7, 2010

1. The Right of Children to Free and Compulsory Education Act has come into force on 1st April 2010. It is good news this came into effect in less than a year after it was passed in the parliament in August 2009.
2. This Act mandates provision of free and compulsory education for children between 6 and 14 years old. 
3. The Act specifies reservation of 25% of places in Private schools for children from poor families but it is unclear how 'poor' will be measured.
4. The Act also made provision...


Continue reading...
 
 

                                                                   << Go to Home Page