காலேஜ் பெண்களையும் , குடும்பத்து பெண்களையும் தவறான வழியில் கொண்டு செல்வதற்கென சிலர் ஒன்று சேர்ந்து செயல்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம், இல்லையென்றால் தெரிந்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் காலமாக உங்கள் வீட்டிற்க்கு ராங் கால் அதிகம் வருவது நீங்கள் அறிந்து இருப்பீர்கள். வீட்டுப்பெண்கள் தவறான போன் அழைப்புகளை கேட்டு திடுக்கிடுகின்றனர், அல்லது மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.  நாம் மிகவும் கவனமாக இல்லாவிட்டால், சில இழப்புகளை சந்திக்க நேரிடும். நம் வீட்டு பெண்களிடம் சில பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றிவரச்சொன்னாலே போதுமானது.

 

1. ராங் கால்களை உடனே துண்டித்துவிடுங்கள்

2. உங்களுக்கு தெரியாதவர் போன் செய்து " நீங்கள் யார் பேசுவது" என்று உங்களின் பெயரை கேட்டால் அறவே சொல்லக்கூடாது.

3. நல்ல அர்த்தமுள்ள SMS ஆக இருந்தாலும் சரி, கவிதை, ஜோக் போன்ற SMS-ஆக வந்தாலும் சரி, அந்த நபருக்கு போன் செய்து யார் உங்களுக்கு அனுப்பியது என்று நீங்களே செக் செய்யாமல், உங்கள் வீட்டிலுள்ள ஆணிடம் சொல்லி அந்த நபர் யார் என்று தெரிந்துக்கொள்வது தான் சரி.

4. CALLER ID இல்லாதவர்கள் கண்டிப்பாக அந்த வசதியை பெற்றுக் கொள்ளுங்கள்

5.புதிதாக வரும் போன் கால்களை ஒரு தாளில் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும்

6. உங்களுக்கு பரிச்சயம் இல்லாத நம்பரிலிருந்து போன் வந்தால் பெண்களாகிய நீங்கள் போனை எடுக்காமல் வீட்டில் உள்ள கணவனையோ, தகப்பனாரையோ, அண்ணன் தம்பியையோ எடுக்கச்சொல்வது நல்லது.

7. முக்கியமாக உங்கள் நம்பரை கடையில் கொடுத்து, என் நம்பருக்கு இத்தனை ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்துவிடுங்கள் என்று சொல்லாமல் , ரீசார்ஜ் கார்டை கடையிலிருந்து வாங்கி வரச்சொல்லி நீங்களே ரீசார்ஜ் செய்வது சாலச்சிறந்தது (உங்களின் செல் நம்பர் மற்றவர் கையில் இந்த வழி தான் கிடைக்கிறது)

8.கடைக்காரர்கள் நல்லவர்களாகவும் இருக்கலாம். எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

9. ஆட்டோ காரர்களுக்கு உங்கள் நம்பரை கொடுப்பதை  தவிற்க்கவேண்டும். நீங்கள் செல்லும் வீட்டிலிருந்து திரும்பி வர ஆட்டோ வேண்டுமானால் அந்த வீட்டிலிருந்தே லேண்ட் போனை யூஸ் பண்ணலாமே

10. முக்கியமாக Next post: முத்த...


Tags: மகளிர் கவணத்துக்கு 
null