முத்துப்பேட்டை பதட்டம் : போலீஸ் குவிப்பு (Satuday July, 09)

 

முத்துப்பேட்டையில் உள்ள பேட்டை பகுதியில் இருக்கும் சவுந்தர்யா திருமண மண்டபத்தில் பாஜகவின் கிளைக்கழக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.


 
பாஜக மாநில பொறுப்பாளர் கருப்பு என்கிற முருகானந்தம் தலைமையில் நடக்கவிருந்த இந்த செயற்குழு கூட்டத்திற்கு சாலை ஓரங்களில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

இதனை அப்பகுதியில் உள்ள முஸ்லீம்கள் காவல்துறையிடம் அகற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் பேரில் முத்துப்பேட்டை போலீசார் கொடிகளை அகற்றினார்கள்.

இதைக்கண்ட பாஜகவினர் காவல்நிலையத்திற்கே சென்று கொடிகளை உடனே கட்ட வேண்டும் என்று முற்றுகையிட்டனர்.

மண்டபத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் கொடி கட்ட அனுமதி அளித்துள்ளது.  அதன்பிறகு பாஜகவினர் காவல் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் பேரணி சென்று செயற்குழுவை கூட்ட திட்டமிட்டுள்ளனர்.

இந்த பேரணி இஸ்லாமியர் பகுதி வழியே செல்லவிருப்பதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடும் என்று காவல் துறை அனுமது மறுத்து வருகிறது. போலீஸ் குவிகிறது.

இதனால் முத்துப்பேட்டையில் பதட்டம் நிலவுகிறது.