சவுதியில் மக்கா, மற்றும் மதினா இடையே, ஜெட்டா வழியாக 450 கீ.மீ தூரம் ரயில் பாதை அமைக்கும் திட்டம் நடந்து வருகிறது, இதில் வேலை பார்த்த சீனர்கள் மெக்காவில் நடந்த விழா ஒன்றில் முஸ்லீமாக மதம் மாறினர்.

சவுதியில் ஹரமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றிய 600 சீனர்கள், மெக்காவில் நடந்த விழா ஒன்றில் இஸ்லாத்தில் இனைந்தனர். இதை குறித்து மெக்காவை சேர்ந்த அதிகாரி அப்துல் அஜீஸ் அல் குதைரி கூறுகையில், சீனர்கள் பணியாற்றிய பகுதியில் , அவர்கள் மொழியில் இஸ்லாமிய புத்தகம் வெளியிட்ட 24 மணி நேரத்தில் , இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றார். ஹராமெயின் திட்டத்தில் பணியாற்றும் 5000 சீன பணியாளர்கள் இடையே, இஸ்லாம் தொடர்பான தகவள்களை பரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.