பாபர் மசூதி: இந்தியா என்ன செய்யப் போகிறது?

பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான். அதில் பெருமைப்படுகிறோம் _ பா.ஜ.க. மற்றும் சங் பரிவார் அமைப்புகள்தாம் மசூதியை இடித்-தோம். மக்கள் எழுச்சியின் விளைவு அது. என்ன தண்டனை தருவீர்கள்? எங்களை உங்களால் தண்டிக்க முடியுமானால், தண்டித்துப் பாருங்கள். தண்டனையை ஏற்கத் தயாராக உள்ளோம்’’ என்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வின் மக்களவைத் துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியுள்ளார். இதே தன்மையில்தான் உமாபாரதியும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற முன்னாள் பா.ஜ.க. உறுப்பி-னரும், ராமஜென்ம பூமி கமிட்டி உறுப்பினருமான ராம்விலாஸ் வேதாந்தியும், சுஷ்மா சுவராஜைத் தாண்டி ஆவேசமாகப் பேசியுள்ளார். பாபர் மசூதி இடிப்பதை மேற்பார்வையிட்டவன் நான்தான். இடித்துத் தள்ளுங்கள் என்று கூறினேன். பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கும்வரை நான் அங்கு இருந்தேன் என்று இவ்வளவு வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

லிபரான் ஆணையம் என்ன சொல்லுகிறது? குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கிறதா? தண்டனை தரப் பரிந்துரை செய்துள்ளதா என்கிற கேள்விகளுக்கே இனி இடமில்லை.

லிபரான் ஆணையத்தை அவர்தான் எழுதி-னாரா அல்லது காங்கிரஸ் கட்சி எழுதியதா என்றெல்லாம் சுஷ்மா சுவராஜ் பேசியிருக்கிறார்.

இவ்வளவு நிர்வாணமாக உண்மையை ஒப்புக்-கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பேசிய பிறகும், அதுவும் நாடாளுமன்றத்தில் கூறிய பிறகும் குற்றவாளிகளைத் தண்டிக்க மத்திய அரசுக்குத் தயக்கம் ஏன்?

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால், இவர்கள்மீது சட்டம் பாயாதது ஏன்? இந்தப் பேச்சுகளின் அடிப்படையிலேயே இதற்குள் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டாமா? இதற்கு மேலும் மத்திய அரசு குற்றவாளிகளின்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குமானால், இந்திய அரசின் நிருவாகம், சட்டம், நீதி இவை அனைத்தின் அடித்தளமும் நொறுக்கப்பட்டுவிட்டன என்று பொருள்; அன்று பாபர் மசூதியை அடித்து நொறுக்கினார்கள்; இன்று இந்திய அரசமைப்பு முறையையே அடித்து நொறுக்கிவிட்டார்கள் என்று உறுதியாகப் பொருள்பட்டுவிடும்.

உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட செயல்; அந்தக் கேடு கெட்ட செயலைச் செய்தவர்கள் பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார் கூட்டத்தினர்தாம் என்று நாடாளுமன்றத்தில் நறுக்குத் தெறித்ததுபோல பேசியுள்ளார்.

இப்பொழுது இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள அத்தனை நாடுகளின் கண்களும் இந்தியாவை உற்றுநோக்குகின்றன.

இந்தியா என்ன செய்யப் போகிறது? குறிப்பாக உள்துறையின் செயல்பாடு எந்தத் திசையில் இருக்கப் போகிறது? சட்டம் தன் கடமையைச் செய்யுமா? சட்டத்துக்குமுன் அனைவரும் சமம் என்ற நிலை உறுதிப்படுத்தப்படுமா? என்ற வினாக்கள் செங்குத்தாக எழுந்து நிற்கின்றன.

அரசியல் காரணங்களுக்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ மத்திய அரசு இதில் தயக்கமும், சுணக்கமும் காட்டுமேயானால், சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ளலாம் என்று பாமர மனிதனும் நினைக்கும், செயல்படும் ஒரு நிலையைக் கண்டிப்பாக ஏற்படுத்தும். இது கல்லின்மேல் பொறிக்கப்பட்ட அழிக்க முடியாத வாசகமாகும்.

சிறுபான்மை மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கண்டிப்பாக உணரும் ஒரு நிலையை உண்டாக்கிவிடும். இந்தியாவின் மதச் சார்பின்மை என்பது இந்துமாக்கடலில் தூக்கி எறியப்பட்டதாகவும் கருதப்படும்.

மிக முக்கியமான காலகட்டத்தில் மத்திய அரசு தன் கடமையைச் செய்யப் போகிறதா, இல்லையா? இதுதான் இன்றைய வினா!

நன்றி: அதிரை போஸ்ட்

   

செல்போனால் சீரழியும் பிள்ளைகள்...?

பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம்.

காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை.இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.

குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.

பள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர். நம்மால் அந்தப் பிள்ளைகளைத் தடுக்க முடிவதில்லை.

நம் வீட்டிலோ, வெளியிலோ ஆண், பெண் இருவர் கட்டிப் புரளும் காட்சிகளைப் பார்க்க முடியாது. குளிக்கும் பெண்கள் கூட ஆபாசமாகக் குளிப்பது கிடையாது.

ஆனால் இந்த சினிமாக் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகள், ஆபாசக் குளியல் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே காட்டப்படுகின்றன. இந்தக் காட்சிகளைத் தான் டி.வி.களில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன. இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகின்றனர். உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுகின்றனர். அவர்கள் தேர்வில் தோற்றதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதைப் பெற்றோர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.
செல்லப் பிள்ளைக்கு ஒரு செல்போன்..

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன. செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம்.

1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன.

2. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.

3. SMS (Short Message Service) என்பது இப்போது Sex Message Service ஆக மாறி விட்டது. அந்த அளவுக்கு ஆபாசச் செய்திகள் இதில் பரிமாறப்படுகின்றன.

4. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள்: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

அண்மையில் நம்முடைய ரகசிய கண்காணிப்புக் குழுக்கள் மூலம், மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் சென்டர்களைக் கண்காணித்ததில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன.பருவமடைந்த பெண் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக வாலிபர்களுடன் செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாறுகின்றனர். பல சந்து பொந்துகளில் சந்திப்புகளும் நடைபெறுவதை அறிய முடிந்தது. பக்காவாக உடல் முழுவதும் முக்காடு போட்ட பருவ வயதுப் பெண்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.
ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் செல்போன் செக்ஸில் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது.

இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கீழே தருகிறோம்.

தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருத்தல்.ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா () நூல்: புகாரி 6243

இந்த ஹதீஸில் வருகின்ற கடைசிக் கட்ட விஷயத்தைத் தவிர அனைத்து விஷயங்களும் செல்போன்கள் வழியாக நடக்கின்றன.

கடைசிக் கட்டத்தை அடைய வேண்டும் என்று அவர்கள் உறுதி கொள்ளும் போது, ஓடிப் போக ஆரம்பிக்கிறார்கள். அப்போது நாம் கைசேதப்பட்டுப் பயனில்லை.செல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தாவிட்டால் கீழ்க்கண்ட ஹதீஸின்படி அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைபர் பொறுப்பாளி யாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளி யாவான்.தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப் படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 893

தொகுப்பு: மௌலவி எம். ஷம்சுல்லுஹா (TNTJ – )

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி வைத்திருப்பவர்களுக்கு  ஒரு எச்சரிக்கை

எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். 
தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.
 

யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை

பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்

அது எப்படி சாத்தியமாயிற்று

புனேயில் உள்ள Asian School of Cyber Lawவில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.
 
'
தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும்.  அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்

தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.  பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.' - விஜய் முகி கணிணித்துறை வல்லுனர 
இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
 

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.
 
ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள்.தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிராதொடர்பும்துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்குஇரண்டு முறை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள்.

அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை 
இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன்
 
இணைக்காமலேயே வைத்திருங்கள்.
 
இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக்
 
கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்துசெய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.
 

ஆம் நம்புங்கள்; அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.
 மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள். 

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜனஎன்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது
 .அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன். 

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.
 
இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.
 
இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்;அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது
 அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம். 
கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு
 இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும். 

அறிவியல் வளர வளர சில மனிதனிதர்களின் எண்ணங்களும் ஆபத்தாகிகொண்டிருக்கிறது ஆதலால் நாம்தான் நம்மைக்காத்துக்கொள்ளவேண்டும்.

நன்றி: கொட்டிக்கிடக்குது

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்!

ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கானபாங்கொலி கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில்எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக விடிவதற்கு இன்னும் நேரம்இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு என்றான்.தூங்கினால் ஜமாத்தோடு தொழமுடியாமல் போய்விடுமே என்றேன். அதற்கு ஷைத்தான் நான்அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப்போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்துகொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். தொழ மறந்தால் வீட்டில் தனியாகதொழ அனுமதி இருக்கிறதே! உன்னை வருத்திக் கொள்ளாதே! இஸ்லாமிய மார்க்கம்இலேசானது. அதை கடினமாக்கி விடாதே! என்றான்.

அவன் பேச்சில் மயங்கி உறங்கிவிட்டேன். சூரியன் உதயமாகி நன்கு வெளிச்சம் பரவிய பின்பே விழித்தேன். அப்பொழுதுஷைத்தான் எதிரில் வந்து வருத்தப்படாதே! நன்மை சம்பாதிக்க பல வழிகள்இருக்கிறது என்றான்.நான் தௌபா செய்ய நாடினேன். உடனே ஷைத்தான் உன் இளமைப் பருவம் முடியுமுன்அதை முழுமையாக அனுபவி என்றான். நான் மரணம் வந்து விடுமே என அஞ்சுகிறேன்என்றேன். அதற்கவன் பைத்தியம் மாதிரி பேசாதே. உன் வாழ்வு இப்பொழுது முடிவடையாதுஎன்றான்.

நான் அல்லாஹ்வின் ஞாபகத்தில் (திக்ர்) ஆழ்ந்தேன். உடனே அவன் என் உள்ளத்தில்உலகத்தின் பல்வேறு இன்பங்களைப் பற்றிய எண்ணங்களை விதைத்தான். நான்அல்லாஹ்விடம் துஆ செய்வதை நீ தடுக்கிறாய் என்றேன். இல்லை, இல்லை. நீ இரவுபடுக்குமுன் துஆ செய்யலாமே என்றான்.நான் உம்ரா செல்ல நாடியுள்ளேன என்றேன்.நல்லது. ஆனால், சுன்னத்தை விட பர்ளுதானே முக்கியம். நீ உம்ரா செல்லாதே, ஹஜ் செல்ல முயற்சி செய என்றான்.நான் குர்ஆன் ஓத முற்பட்டேன். உடனே அவன் நீ ஏன் பாடல், கவிதைகளை பாடிஉன்னை சோர்விலிருந்து விடுவிக்க மறுக்கிறாய்? என்றான். நான் பாடல் பாடி கூப்பாடுபோடுவது ஹராம் என்றேன். உடனே அவன் மார்க்க மேதைகளிடையே இசை, பாடல்குறித்து கருத்து வேற்றுமை உள்ளது என்றான். இசையை ஹராம் என்று கூறும்ஹதீஸ்களை நான் படித்துள்ளேன் என்றேன். உடனே அவன் அந்த ஹதீஸ்களின்அறிவிப்பாளர்கள் வரிசை பலஹீனமானது என்றான்.

அந்த சமயத்தில் ஒரு அழகிய இளமங்கை என்னை கடந்து சென்றாள். நான் என்பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன். உடனே அவன் என்ன வெட்கப்படுகிறாய்?முதல் பார்வை தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே! என்றான். அந்நியப் பெண்ணை பார்ப்பதுநரகில் தள்ளிவிடும் என அஞ்சுகிறேன என்றேன். அவன் சிரித்து விட்டு இயற்கை அழகைகலைக்கண்ணோடு ரசிப்பது அனுமதிக்கட்டது தான என்றான்.நான் தாவா-அழைப்புப்பணி செய்ய நாடியுள்ளேன் என்றேன். உடனே அவன், ஏன் நீதர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க விரும்புகிறாய்? என்றான். என் நோக்கம் இஸ்லாத்தைபிறருக்கு எடுத்து இயம்புவது என்றேன். உடனே அவன் இல்லை உன் நோக்கம் உன்னைஎல்லோரும் பெரிய பேச்சாளன் எனப் பாராட்ட வேண்டும். இந்த பெருமை தான் உன்அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். அதனால், தாவாவை விட்டு விட்டு உன் சொந்தவேலையை செய என்றான்.

நான் இமாம் அஹமது இப்னு ஹன்பல் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்றேன். அதற்குஅவன் அவர் மக்களை குர்ஆன் மற்றும் சுன்னத்தின் பக்கம் அழைத்து என்னை எதிர்த்தார்என்றான்.நான் இமாம் இப்னு தைமிய்யாவை பற்றி என்ன சொல்ல விரும்புகிறாய்? என்றேன்.அதற்குஅவன் அவருடைய வார்த்தைகள் என் தலையை பிளக்கின்றன. என்றான்.நான் இமாம் புகாரி எப்படி? என்றேன். அதற்கு அவன் அவர் தொகுத்த ஹதீஸ் கிதாப் என்வீட்டில் இருந்தால் என் வீட்டையே கொளுத்தி விடுவேன என்று கோபமாகக் கூறினான்.நான் ஸலாவுதீன் அய்யூபி எப்படி? என்றேன். அதற்கு அவன் அவரைப் பற்றி பேசாதே.என்னையும், என் தோழர்களையும் கேவலப்படுத்தி, எங்களை மண்ணோடு புதைத்தார் எனவெறுப்போடு கூறினான்.நான் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என இழுத்தேன். அதற்கு அவன், நீ என்னைகோபப்படுத்துகிறாய். அவருடைய பேச்சும், எழுத்தும் எரி நட்சத்திரம் போன்று என்னைசுட்டெரிக்கிறது எனக் கத்தினான்.

நான் அல் ஹஜ்ஜாஜ் பற்றி? என இழுத்தேன். அதற்கு அவன் அவர் போன்று இன்னும் 1000மனிதர்கள் வரவேண்டும். அவர் தன் நடவடிக்கைகள் மூலம் என்னையும், என்தோழர்களையும் சந்தோஷப்படுத்தியது போன்று யாரும் செய்யவில்லை என்று உற்சாகமாகக்கூறினான்.நான் பிர்அவ்ன் எப்படி? என்றேன். அதற்கு அவன் அவனுக்கு என் ஆதரவு உண்டு. அவன்வெற்றி பெற விரும்பினேன் என்றான்.நான் அபு ஜஹ்ல் பற்றி என்ன நினைக்கிறாய்? எனப் பேச்சை மாற்றினேன்.அதற்கு அவன், அப்படிக் கேளு. நானும், அவனும் உடன் பிறவா சகோதரர்கள் என்றுஉற்சாகமாகக் கூறினான்.நான் அபூ லஹப் எப்படி? என்றேன். அதற்கு அவன் நாங்கள் என்றென்றும் இணைபிரியாததோழர்கள் என்றான்.நான் லெனின் எப்படி? என்றேன். அதற்கு அவன். என் சிறந்த சீடர், ஸ்டாலின் என்ற என்சிறந்த தளபதியை உருவாக்கினார். என்றான்.

நான் மஞ்சள் பத்திரிக்கைகள் பற்றி? என இழுத்தேன். உடனே அவன் அவை தான் என்வேத புத்தகங்கள் என்றான்.நான் மார்க்கப் பத்திரிக்கைகள் பற்றி என்ன கூறுகிறாய்? என்றேன். அதற்கு அவன் அல்-ஜன்னத், சமரசம், விடியல் வெள்ளி, அல் முபீன், ஒற்றுமை, முஸ்லிம் பெண்மணி பற்றித்தானே கேட்கிறாய்? அவர்கள் எல்லாம் காசு சம்பாதிக்கும் எழுத்து வியாபாரிகள். அவற்றைநான் படிப்பது வீண் விரயம் என்றான் கேலியாக.

நான் டி.வி., சாடிலைட் சேனல் பற்றி என்றேன். அதற்கு அவன் அவை தான் மக்களைஎன்றென்றும் என் ஞாபகத்திலேயே வைத்திருப்பவை என்றான்.நான் பிபிசி, சிஎன்என் சேனல் பற்றிக் கூறு என்றேன். அதற்கு அவன் அவை மட்டுமல்லசன், ஜெயா, விஜய், ஸ்டார், ஜீ, ஸஹாரா, தமிழன், சோனி, பொதிகை, தூர்தர்ஷன், ராஜ்இவையெல்லாம் என் ஆயுதங்கள். அதன் மூலம் தான் விஷம் தடவிய தேனை மக்கள்பருகுமாறு செய்கிறேன். முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை இவைமூலமே வெற்றிகரமாக நடத்தி வருகிறேன் என்று பெருமையாகக் கூறினான்.

நான் காபி ஷாப், இண்டர்நெட் கஃபே எப்படி? என்றேன். அதற்கு அவன் அல்லாஹ்வின்நினைவிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் மக்களைத் திசை திருப்பும் எந்த செயலையும் நான்வரவேற்கிறேன் என்றான்.நான் சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பிளாஸா பற்றி என்ன கூறுகிறாய்?என்றேன்.அதற்கு அவன் அவை தான் என் தோழர்கள் கூடும் சங்கம்-கிளப் , என்றான்.

நான் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன நினைக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் என்எண்ணங்கள், நோக்கங்கள், பிரார்த்தனைகள், சொத்துக்களை அவர்களுக்கு அளித்து,அவர்களை இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கினேன் என்று பெருமையோடு கூறினான்.நான் இஸ்ரேல் யூத நாடு பற்றி என்ன நினைக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் நீ புறம்பேசாதே. என் விருப்பத்திற்குரிய என் தாய் நாட்டை பற்றி தவறாக பேசி என்னைநோகடிக்காதே என்றான்.நான் வாஷிங்டன் பற்றி என்ன சொல்கிறாய்? என்றேன். அதற்கு அவன் அதுவே என் புகுந்தவீடு. என் இராணுவம் அங்கு தான் நிலைகொண்டுள்ளது. என் தலைமை அலுவலகமும்அதுவே என்று பெருமையாகக் கூறினான்.

நான் மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் பேராசை, சந்தேகம்,வீண் பொழுது போக்கு அம்சங்கள், பாடல், ஆட்டம், குழப்பம் மற்றும் பொய், போலியானநம்பிக்கைகள் மூலம் தான். இன்னும் புறங்கூறுவது, வீண் வதந்திகளைப் பரப்புவது,நேரத்தை வீணடிப்பது, தேவையற்ற விவாதங்கள், இவற்றின் மூலம் வழிக்கெடுக்கின்றேன்.ஆமாம், என்ன நீ என் தொழில் ரகசியங்களை கேட்கின்றாயே, எதற்கப்பா? என்றுவினவினான்.

சரி மார்க்க அறிஞர்களை எப்படி வழிதவறச் செய்கிறாய்? என்று நான் வினவினேன். அதற்குஅவன் அது தான் மிகவும் சுலபம். பெருமை, புகழ், பாராட்டு, கர்வம், பொறாமை, இயக்கம்மூலம் தான் என்றான்.

சரி வியாபாரிகளை எப்படி உன் வழிக்கு கொண்டு வருகிறாய்? என்று நான்வினவினேன்.அதற்கு அவன் அவர்களை லஞ்சம் கொடுக்கவும், வட்டிக்கு கடன் வாங்கவும்,கொடுக்கவும் மற்றும் ஜகாத், ஸதகா கொடுப்பதை விட்டு தடுப்பது, கலப்படம், மோசடிசெய்யத் தூண்டியும் அவர்களை சரிகட்டுகிறேன் என்றான்.

நான் பெண்களை எப்படி வழிகெடுப்பது? எனப் பேச்சை மாற்றினேன். அதற்கு அவன் சபாஷ்.நீ அவர்களை வழிகெடுக்க யோசனை கேட்கிறாய். எக்ஸலண்ட். என் வழிமுறை என்னதெரியுமா? அவர்கள் உள்ளத்தில் பேரழகி என்ற மாயையை, போதையை ஏற்படுத்தி, தங்கள்அங்க அவயங்களை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாக்கத் தூண்டுவது.ஹலாலைவிட ஹராமை சிறந்ததாக அவர்களுக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குவது.ஒரு பெண்ணை வழிகெடுத்தால் அவள் மூலம் குறைந்தது நான்கு ஆண்களை வழிதவறச்செய்யலாம். 1. தந்தை, 2. சகோதரன், 3. கணவன், 4. மகன். சுருங்கச் சொன்னால் ஒருபெண் மூலம் ஒரு குடும்பத்தையே வழிகெடுக்கலாம் என உற்சாகம் கொப்பளிக்கக்கூறினான்.

நான் இளைஞர்களை எப்படி சரிகட்டுகிறாய்? என்றேன். அதற்கு அவன் சினிமா, இசை,இண்டர்நெட், டிஸ்கோ, காதல், சிகரெட், போதை மருந்து, கவர்ச்சியாக உடைஉடுத்துவது, சைட் அடிப்பது, மார்க்க விஷயத்தில் அசட்டை, அரசியல், இயக்க வெறி மற்றும்ஹராமை பேண போலியான ஆதாரங்களை காட்டுவது மூலம் தான் என்றான்.

நான் புதிய கலாச்சாரம் பற்றி கூறேன்என்றேன். அதற்கு அவன் என் கொள்கைகளை முழுவதும் பின்பற்றி, பரப்பும் சினிமா மற்றும்பத்திரிக்கை உலகைச் சார்ந்த என் சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம் மக்களைஇஸ்லாத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆகவே அது சிறந்தது தானே? என்றான்.

நான் மூட நம்பிக்கைகள் குறித்து என்ன கூறுகிறாய்? என்றேன். அதற்கு அவன் அது தான்என் ஈமான். அதை பரப்புபவர்கள் மந்திரவாதிகளும், ஜோஸ்யர்களும். நாங்கள் மூவருமேவௌ;வேறு பெயர்களுடைய ஒரு தாய் மக்கள் என்றான்.

நான் ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைப்பவர்களை விமர்சனம் செய் என்றேன்.அதற்கு அவன் கோபமாக அவர்கள் என்னை சிறுமைப்படுத்தி, நோவினை செய்கிறார்கள். என்பலத்தைக் குலைத்த சதிகாரர்கள்.நான் கஷ்டப்பட்டு வழிகெடுத்தவர்களையெல்லாம் நேர்வழிக்கு திருப்பிய சண்டாளர்கள். நான்பேச ஆரம்பித்தால் அவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். நான் பாட ஆரம்பித்தால் அவர்கள் திக்ர்செய்கிறார்கள். என் பேச்சை அவர்கள் மதிப்பதே இல்லை. என்னை விட்டும் அல்லாஹ்விடம்பாதுகாவல் தேடுகிறார்கள் என்று இயலாமை கலந்த வருத்தத்தில் கூறினான்.

நான் காரூனிடம் என்ன வித்தை காட்டினாய்? என்று கேட்டேன்.அதற்கு அவன் உற்சாகமாக, நான் அவன் காதுகளில் கிசுகிசுத்தேன். கிழவனின்இளமையான மகனே! உன் பொக்கிஷங்களை நிரப்பு. நீ தான் கடவுள் என்றேன். குஷியாகஎன் வலையில் வீழ்ந்தான் என்று கூறினேன்.நான் பிர் அவ்ன் எப்படி உன் வலையில் வீழ்ந்தான் என்று கேட்டேன்.அதற்கு அவன், நான் பிர் அவ்னிடம் கூறினேன். நீ தான் மாபெரும் சக்தியாளன். உன்னைஎதிர்ப்பவர் இந்த எகிப்திலோ, பூமியிலோ உள்ளனரா? என்றேன். அவனும் என்அடிமையானான் என்று கூறினான்.

நான் ஒரு மனிதனை எப்படி மதுவிற்கு அடிமையாக்குகிறாய்? என்று கேட்டேன்.அதற்கு அவன் அது மிகவும் எளிது. இது திராட்சை ரசம். உன் உடல் நோய்கள்அனைத்தையும் இது தீர்க்கும். இது குற்றம் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்புதேடுவதற்கு உனக்கு ஆயுள் இருக்கிறதே. ஏன் அஞ்சுகிறாய்? என்று மயக்குவேன் எனக்கூறினான்.நான் உன் துஆ எது? என்றேன். அவன் சினிமா பாடல்கள் என்றான்.நான் உன் குறிக்கோள் என்ன? என்றேன். அதற்கு அவன் மக்களிடையே பொய்யானநம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுப்பது என்றான்.

நான் எது உன்னை அழிக்கும்? என்று கேட்டேன். அதற்கு அவன், குர்ஆனில் உள்ளஆயத்துல் குர்ஸி 2வது அத்தியாயம் 255வது வசனம் யார் ஓதுகிறார்களோ அவர்களைஎன்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான் என்றுகூறினான்.நான் அடடே! அப்படியா, எனக் கூறிவிட்டு ஆயத்துல் குர்ஸியை ஓத ஆரம்பித்தேன். உடனேஷைத்தான் கூக்குரலிட்டவாறு, அவ்விடத்தை விட்டு வெருண்டோடி மறைந்தான்.
மூலம் - - ஷேக் அயாத்

அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தன் திருமறையாம் குர்ஆனில் கூறுகின்றான்,நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்.ஷைத்தானுடைய அடிச்சுவட்டைக் கூட பின்பற்றாதீர்கள். ஏனெனில், அவன் உங்களுக்குபகிரங்க விரோதி ஆவான் குர்ஆன் 2 : 208ஆகவே, இன்ஷாஅல்லாஹ் நாம் அனைவரும்ஷைத்தானுடைய பாதையில் செல்வதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம்.நம்முடைய மற்ற சகோதர, சகோதரிகளையும் அங்ஙனம் செயல்பட அறிவுறுத்துவோம்.

நன்றி;அஹ்மது ஸாஹிபு  

 

 

கொலைகாரப் பாவிகள்!

 

அக்டோபர் 25 வியாழன். இடம் பஹ்ரைன். 2வது படிக்கும் 7 வயது சுஹைல். எனது நண்பருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் குழந்தையில்லாமல் இருந்து, பின் பிறந்த மூத்த மகன். காலையில் பள்ளிக்குப் புறப்படத் தயாராகிறான். காலையிலேயே அடுத்த இரு நாள் விடுமுறைக்காக என்ன செய்வது என தன்னையும் பெற்றோரையும் தயார் படுத்திக் கொண்டிருந்தான்.

சுஹைல் பள்ளி முடிந்து பள்ளிக்கூட வேனில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான். மிகக் குறுகிய சந்தில் உள்ள அவனுடைய வீட்டின் முன்னர் எப்போதும் போல பெரிய ஒலி எழுப்பி விட்டு வேன் நிற்கிறது. வேனிலிருந்து பிள்ளைகளை இறக்கிவிட ஒரு ஆயாவை பள்ளி நியமித்திருக்கிறது. ஆயா குழந்தையை இறங்கச் சொல்லி விட்டு, குழந்தை இறங்கி விட்டதா என சரியாக உறுதிப் படுத்தாமலேயே பக்கக் கதவை இழுத்து சாத்துகிறாள். பையனின் வலது கை விரல்கள் கதவில் மாட்டி நசுங்கிக் கொண்டிருக்கிறது. பையனுடைய அலறலைப் பொருட்படுத்தாமல் அல்லது கேட்காததால் ஆயா ஓட்டுநரைப் போகப் பணிக்கிறாள்.

கதவிடுக்கில் மாட்டிய கைகளோடு வண்டி நகர்கிறது. பையன் வண்டியில் தொங்கிக் கொண்டு. பையனின் கதியை தன் வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்த எதிர்த்த வீட்டு அரபிப்பெண் தன் ஜன்னலைத் திறந்து கொண்டு கத்துகிறாள். அவள் கத்தலைக் கேட்ட ஆயா கதவைத் திறக்கிறாள். வலது கையின் மூன்று விரல்கள் சதை நகம் வரை துண்டித்து தொங்கிய படி, மல்லாந்த நிலையில், கதவுக்கு கீழே இரு சக்கரங்களுக்கு இடையில் விழுகிறது குழந்தை. வேன் நிறுத்தப் படாததால், வலது தோள் பட்டை வழியே முகவாயை இடித்த படி வேனின் பின்புறச் சக்கரம் குழந்தையின் மேல் ஏறி இறங்கி விடுகிறது.

அதற்குள் அந்த அரபிப் பெண்ணிண் மகன் ஓடி வந்து இருபதடிகள் தூரத்தில் வேனை நிறுத்தச் செய்கிறார். 'என்ன நடந்தது என்று தெரிகிறதா?' என்று ஓட்டுநரை கேட்கிறார். தெரியாதென்கிறான். அவனை வண்டியை விட்டு வெளியே இழுத்து அங்கேயே இரண்டு முறை அவனை கன்னத்தில் அறைகிறார்.

வண்டியின் பெரிய ஒலியைக் கேட்டதால், விரைந்து வந்த தாய் மகனைப் பார்க்கும் ஆவலில் கதவைத் திறக்கிறாள். கதவின் முன்னர் யாருமற்ற நிலையில் இரத்த வெள்ளத்தில் எவ்வித சலனமுமில்லாமல் தவமிருந்து பெற்ற மகன். அலறித் துடிக்கிறாள். அரற்றுகிறாள். தெருமுனைக் கடையில் பணியிலிருக்கும் குழந்தையின் மாமன் ஓடோடி வருகிறான். போலீஸ் வருகிறது. ஆம்புலன்ஸ் வருகிறது. நெருங்கிய உறவினர்களால் குழந்தையின் அப்போதைய நிலைமையை பார்க்க முடியாது என்பதால், தெரிந்த ஒருவர், பையனின் நெஞ்சில் விட்டு விட்டு அழுத்தி முதலுதவி செய்தவாறு ஆம்புலன்ஸில் செல்கிறார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனைத் தகவல்கள்.

முதன் முதலில் Gulf Daily News எனும் ஆங்கில தினசரியில் செய்தி வருகிறது. தாய் தன் வீட்டின் ஜன்னலருகே பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பையன் வண்டியின் முன்சக்கரத்தில் அடிபட்டு, இரத்த வெள்ளத்தில் தன் மகனைப் பறிகொடுத்ததாக, யாரோ ஒருவர் நேரில் பார்த்து சொல்லியதாக செய்தி சொல்கிறது. மற்ற பத்திரிக்கைகள் அதையே காப்பியடித்து அடுத்த நாள் செய்தியாக்குகின்றன

அந்தப் பத்திரிக்கைக்கு இந்த செய்தி கொடுத்தவர் கேரள நாட்டவர் - அவர்தான் அப்பத்திரிக்கையின் Chief Reporter.

மற்ற பத்திரிக்கைகள் இந்த செய்தி தவறென்று அறியத் தந்தவுடன் மறுப்பு செய்தியை வெளியிடுகின்றன. ஆனால் இந்தப்பத்திரிக்கை மட்டும் மறுப்பதாகச் சொன்னாலும் 'தாய் - தன் வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்ததாக' மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறது.

ஏன்? ஜன்னலிலிருந்து பார்த்ததாகச் சொன்னால் தாயைப் பார்த்த மகிழ்ச்சியில் பிள்ளை ஓடினான் எனச் சொல்லலாம். அதனால்தான் வண்டியை எடுப்பதற்கு முன்னாலேயே முன்பக்கமாக ஓடி வண்டியின் முன்னால் அடிபட்டு இறந்ததாக சொல்லலாம். பள்ளி பிள்ளையை இறக்கி விட்டு விட்டது அதன் பின்னர் நடந்ததற்கு பள்ளி பொறுப்பேற்காது என்று சொல்லலாம். மக்கள் மத்தியில், பள்ளிக்கும் சம்பவத்துக்கும் பொறுப்பில்லை என்ற கருத்துருவாக்கலாம்.

ஏன்? சீப் ரிப்போர்ட்டர் பள்ளிக்கூடம் நடத்துபவர்களின் மதத்தைச் சார்ந்தவர். ஒரே இடத்தில் பிரார்த்திக்கும் உட்பிரிவைச் சேர்ந்தவர்களாம். பள்ளிக்கூட நிர்வாகத்தோடு பல வகைகளில் தொடர்புடையவராம்.

அந்த வீட்டுக்கு வெளிப்புற ஜன்னலே இல்லை. கிராதி இருக்கிறது ஆனால் வெளியில் இருந்து யாரும் அங்கு நிற்பதை பார்க்கவோ அனுமானிக்கவோ இயலாது என்பதைச் சுட்டிக்காட்டி, குழந்தையின் தாய் மாமன் கேட்டதற்கு 'குழந்தையோ இறந்து விட்டது இனி பள்ளியின் பெயரைக் கெடுப்பதால் என்ன நன்மை' என்றாராம். அடக் கொலைகாரப் பயல்களே! பத்திரிக்கை தர்மம், நேர்மை எல்லாம் மலம் தின்னவா நாய்களே!.

சம்பவத்தில் தொடர்புடைய வேன் பள்ளிக்கு சொந்தமானதில்லையாம். பிள்ளைகளை கொண்டு வந்து விட்டு பின் அழைத்துப் போக பள்ளி நிர்வாகம் வாடகைக்கு வைத்திருக்கிறதாம். ஓட்டுநரும் அந்தக் வாடகைக்கார் கம்பெனியில் அன்றுதான் வேலையிலமர்ந்த புதியவராம். வண்டியின் கதவு சரியாக மூட முடியாமல், பழுது சரி செய்யப் படாமல் இருந்ததாம்.

[பஹ்ரைனின் இந்திய நாட்டுத் தூதுவர் நேரடியாக வந்து விசாரித்ததோடு, பஹ்ரைனில் உள்ள எல்லா இந்தியப் பள்ளிகளையும் அழைத்து ஒழுங்கு முறைகளை சரிவர கடைபிடிக்க அறிவுறுத்திய தோடில்லாமல், இந்தியர்கள் நடத்தும் வாடகை வண்டிக் கம்பெனிகளை அழைத்து வண்டிகள் ஒழுங்காக பராமரிக்கப்பட வேண்டியும் அறிவுறுத்தியதோடு, பஹ்ரைன் போக்குவரத்து காவல்துறையிடம் சரியாக இல்லாத வண்டிகளுக்கு கடுமையான தண்டணைகளை தரச் சொல்லியும் கேட்டுக் கொண்டுள்ளாராம்.குழந்தைகளை பள்ளிக்கனுப்பும் பெற்றோர்களே!.

உங்கள் குழந்தையின் பள்ளி சொந்தமாக வண்டி வைத்திருக்கிறதாநிர்வாகம் பொறுப்பானதாஏனோ தானோ நிர்வாகமா? சிறு பிள்ளைகளை ஆயாக்கள் ஒழுங்காக வீடு வரை வந்து விட்டுப் போகிறார்களா போன்றவற்றை கவனியுங்கள்

 

ஹராம் Food Codes :

கீழே தரப்பட்டுள்ள சேர்ந்த உணவுப்பொருள்களை தவிருங்கள். இவைகள் ஹராம் என்று அறிவித்துள்ளது. நீங்கள் கடையில் வாங்கும் அனைத்து Food Products களிலுக்கு பின் பக்கத்தில் Ingredients (or) Additives என்று சேர்க்கப்பட்ட பொருள்களை பட்டியளிட்டுருப்பார்கள். அதில் இவற்றில் எதாவது இருக்கிறதா என்று பார்த்துவாங்குவது நல்லது.

 

Haram additives with “E” prefixes E120, E140, E141, E252, E422, E430, E431, E470, E471, E472(a), E472, E472©, E472(d), E472(e), E473, E474, E475, E477, E478, E481, E482, E483, E491, E492, E494.


Haram additives without “E” prefixes 120, 141, 160(A), 161, 252, 300, 301, 422, 430, 431, 433, 435, 436, 441, 470, 471, 472(a, e), 473, 474, 475, 476, 477, 481, 482, 483, 491, 492, 494, 542, 570, 572, 631, 635, 920.

Source: Islamic Religious Council of Singapore (MUIS)  

அல்லது இங்கே ஆங்கில பெயரை கொடுத்து Search செய்து பார்க்கலாம். Results வந்த பிறகு அதை Cick  செய்து விளக்கம் தெரிந்துக்கொள்ளலாம்.