சிறுவர் தடுப்பு ஊசி அட்டவணை (Vaccination schedule )

தடுப்பு ஊசியை பற்றி உங்களுக்கு நினைவுபடுத்துவதற்காக மட்டுமே இந்த குறிப்பை இங்கே தருகிறேன். உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே நடக்கவும்

 


பிறப்பு முதல் 16 வயது வரை, சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் அளிக்கப்பட வேண்டிய கால
அட்டவணை. இது பொதுவான அட்டவணை. சில குழந்தைகளுக்கு வேறு பாதிப்புகள் இருந்தால் கால அட்டவணை
மாறுபடலாம்.

முக்கியமாக உங்கள் குழந்தையின் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அதன்படி நடக்கவும்.

 

வயது மருந்து
பிறந்தவுடன் பிசிஜி
போலியோ சொட்டு மருந்து
ஹெப்-B
6 வாரங்கள் DPT - 1
போலியோ சொட்டு மருந்து
ஹெப்-B - 2வது
10 வாரங்கள் DPT - 2
போலியோ சொட்டு மருந்து
14 வாரங்கள் DPT - 3
போலியோ சொட்டு மருந்து
6-9 மாதங்கள் போலியோ சொட்டு மருந்து
ஹெப்-B - 3வது
9 மாதங்கள் மீஸல்ஸ் தடுப்பூசி (அம்மை)
15-18 மாதங் கள் MMR (Measles, Mumps, Rubella)

DPT - 1வது பூஸ்டர்
போலியோ சொட்டு மருந்து
5 வயது DPT - 2வது பூஸ்டர்
போலியோ சொட்டு மருந்து
10 வயது TT (டெட்டனஸ்) - 3வது பூஸ்டர்
ஹெப்-B - பூஸ்டர்
15-16 வயது TT - 4வது பூஸ்டர்

விளக்கம்:

ஹெப்-B - ஹெபாடிடிஸ்-B தடுப்பூசி

DPT - டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டூஸிஸ் தடுப்பூசி

MMR - அம்மை நோய் தடுப்பூசி

டெட்டனஸ் பூஸ்டர் - 5 வருடங்களுக்கு ஒரு முறை.


உங்கள் குழந்தைக்கு தடுப்பு ஊசி போட்டபின் ஏதாவது குறிப்பிடத்தக்க மாறுதல் தெரிந்தால் அடுத்த முறை தடுப்பு ஊசி
போடுமுன் டாக்டரிடம் தெரிவிக்கவும்.

வசதிப்பட்டால் போடலாம்
(Optional)


டைபாய்ட் தடுப்பு ஊசிகள், ஹெமோபிலஸ் இன்ப்ளூயஜா டைப்-B தடுப்பூசி, ஹெபாடிடிஸ்-A தடுப்பு ஊசிகள், வெரிசெல்லா (தட்டம்மை)
தடுப்பூசி ஆகியவற்றையும் இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் சிபாரிசு செய்கிறது. இதற்கு தகுந்த காலங்களை உங்கள் குழந்தையின்
டாக்டரிடம் ஆலோசிக்கவும்.  
 
ஆக்கம்: viggie - நாள்: 03 Dec, 2008

 

 

தாய்மார்களே,

 

உங்கள் கண்ணான குழந்தையை எப்போதும் கவனியுங்கள். குழந்தை பருவம் ஆபத்தை அறியாது, நாம் தான் பாதுகாப்பான    Environment -ஐ ஏற்படுத்தித் தரவேண்டும். Tips –படியுங்கள்

_______________________________________________________________________

 

·  உங்களையும், உங்கள் குழந்தைகளையும் எப்போதும் காப்பவன் "அல்லாவேயன்றி யாருமில்லை", அதனால் வாசலில் பிள்ளைகளுக்கு ஓத சொல்லி, நீங்களும் ஒதி அனுப்பவும்.

 

· குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது அவர்களின் காலனிகளை தட்டி சுத்தப்படுத்திவிட்டு, உங்கள் கைகளை உள்ளே விட்டு பார்த்த பின் அனிவியுங்கள், பூச்சிகள் உள்ளே இருந்து, கடித்து விட்டால்.......

 

   குழந்தை எதாவது சொன்னால் பொறுமையுடன் கேளுங்கள், அதற்கு Explain செய்வதில் சிரமம் இருக்கலாம்

 

·  குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்

 

·  மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.

 

·  குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.

 

·  சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மாற்றி விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

 

·  சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.

 

·  குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.

 

·  குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.

 

·  கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

 

·  குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.

 

·  கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

 

·  இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.

 

·  ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)

 

·  தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள் .குழந்தை உள்ளே விழ சான்ஸ் இருக்கிறது.

 

·  சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.

 

·  கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

 

·  பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.

 

·  வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.

 

·  மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

 

·  மொபைல் ,எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.

 

·  இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.

 

·  சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

 

·  சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப் பார்க்க ஆசைப்படுகிறது. சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.

 

·  ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.

 

·  சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.

 

·  வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.

 

·  கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.

 

·  தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்

 

·  சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.

 

·  ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.

 

·  கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.

 

·  எங்கேயாவது பைக்கில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது பைக் சைலென்ஸர் சூடாக இருக்கும் . குழந்தைகள்  ஓடி வந்து சைலன்ஸரில் பட்டுவிடலாம்..

 

·  வீட்டில் சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை. பைக்கை மூடி வைக்கலாம்.

 

·  குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.

 

·  குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.

 

·  தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.

 

·  வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.

 

·  குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.

 

·  துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப் பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.

 

·  தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.

 

·  குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும்.

 

·  குழந்தகளுக்கு உடைகள் போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.

 

·  நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.

 

·  வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.

 

·  குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.

 

·  விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்

 

 

 

குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்..

பொதுவாக குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து நடக்கு பெற்றோர் மிக்க கவனமாக

இருத்தல் வேண்டும்.எனக்கும் 15 வயதில் மகனும்,12 வயதில் மகளும் இருப்பதால்

ஓரளவிற்கு குழந்தைகளின் உணர்வுகள் தெரிகிறது.

1.   அறிவியல் மேதை டாக்டர் அப்துல் கலாமே சொல்லி  இருக்கிறார்.குழந்தைகள் மீது அசையாத நம்பிக்கை வையுங்கள் என்று.

2 .  அவர்களின் உணர்வுகளை புரிந்து நடக்க வேண்டும்.சிறிய குழந்தைகளுக்கு அவரவர் பெற்றோர் தான் ரோல் மாடல்,அதனால் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்,ஒவ்வொரு நடவடிக்கையும் நோட்டம் விடுவார்கள்,அவர்களோடு சேர்ந்து நாமுன் நம்மை திரும்பிப்பார்த்து திருத்திக்கொள்வது  நல்லது.

3.  சின்ன குழந்தைகள் அவங்க அம்மா,அப்பாவை பெருமையாக எல்லோரிடமும் அறிமுகப்படுத்த விரும்புவார்கள்,அதற்கு நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும்,அவர்களோடு நாமும் போட்டி போட்டு புதியவைகளை கற்றுக்கொள்ளவேண்டும்.

4.  முதலில் குழந்தைகளோடு குழந்தையாய் நெருங்கிப்பழக வேண்டும்,அவர்களோடு  ஒருநேரமாவது சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடவேண்டும்,இரவு டின்னராகக் கூட இருக்கலாம்.இது அன்னியோன்யத்தை வளர்க்கும்.

5.   அவர்கள் படிப்பில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்,தினமும் ஒரு மணி நேரமாவது குறைந்தது செல விட வேண்டும்,இரவில் 9 மணிக்குல் சாப்பாடு முடிந்து பத்துக்குள் தூங்க வைத்து விட வேண்டும்.வீகெண்ட்,கெஸ்ட் உள்ள நேரம் தவிர்த்து இந்த விஷயத்தில் ஸ்ட்ரிக்டாக இருக்க வேண்டும்,மதியம் தூங்க வைக்காமல் நாமும் சிறிது ஓய்வு எடுத்து வீட்டு அவர்களோடு நேரத்தை செலவழித்தல் நலம்.

6.  அன்பான அரவணைப்பு அவசியம்,வளர்ந்த குழந்தையாய் இருந்தாலும் சரி.ஒன்றுக்கு மேல் குழந்தை இருந்தால் ஒரு குழந்தையின் மைனஸ்,ப்ளஸ் அவரவரிடம் தனிதனியாக பேச வேண்டும்.இது அவகளுக்குள் பகை உணர்ச்சி வளராமல் தடுக்கும்.

7.  பரீட்சை சமயம் டிவி,கம்ப்யுட்டர் தவிர்த்தல் நல்லது ,கவனம் சிதறாமல் இருக்கும்.

8.  உறவினர்கள் வரும் போது பழகும் விதம்,உபசரித்தல் சொல்லிக்கொடுக்க வேண்டும்.மற்றவர்களின் உணர்வுகளை  பிள்ளைகள் மதிக்க கற்றுக்கொள்வார்கள்.

9.  அவர்கள் சோர்ந்து இருக்கும் போது நாம் தவறாமல் உற்சாகப்படுத்த வேண்டும்,எல்லா விரலும் ஒரு போல் இருப்பதில்லை,அவரவர் குணமறிந்து நடப்பது பெற்றோரின் கடமையாகும்.

10.   பொழுதுபோக்கு விளையாட்டு மிக்க அவசியம்,அதற்கு நாம் நேரம்,வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

11.   முடிவு எடுப்பதை ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் பால் ஒப்படைக்க வேண்டும்,இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்,தவறு ஏற்படும் போது அனுபவத்தால் திருத்திக்கொள்வார்கள்.

குழந்தைகளை குழந்தைகளாய் நினைத்து பழக வேண்டும்,எடுத்து சொல்கிறவிதமாய் சொன்னால் புரிந்து கொள்வார்கள்.எல்லாம் நமது வளர்ப்பில் தான் உள்ளது.

 

 

குழந்தைகளை கவனியுங்கள்

குழந்தைகள் சாப்பிடிம்போது டி வி பார்ப்பதை தவித்து விடுங்கள்
சாப்பிடுகிறோம் என்கின்ற எண்ணத்தை அவர்களுக்கு உணர்த்துங்கள்

வெளியில் விளையாடிவிட்டு வந்ததும் முதலில் கை கால்கள்
கழுவச்சொல்லுங்கள் சுத்தத்தின் மகத்துவத்தை சொல்லுங்கள்

பெரியவர்கள் வீட்டுக்குவரும்போது அவர்களுடன் மரியாதையாக
நடக்க கற்றுக்கொடுங்கள்

அதிகநேரம் கேம்விளையாடவோ கம்பியூட்டரில் அமரவோ
அனுமதிக்காதீகள் அதனால் உண்டாகும் பிரச்சனைகளை
அன்போடு விளக்குங்கள்

எப்போதும் படி படி என்று சொல்லாமல் அதர்கென்று நேரம் ஒதுக்கி
அந்த நேரங்களில் படிக்கச்சொல்லி கண்டிப்பாக சொல்லுங்கள்

அவர்களுக்கென்று நேரம் ஒதுக்கி அவர்களுடைய பேச்சையும் கேளுங்கள்
 
அவர்களின்சின்னச்சின்ன ஆசைகளை அப்பப்ப நிறைவேற்றுங்கள்

முடிந்தவரை கடுமையாக நடப்பதை தவிருங்கள்
இனியசொற்களையே அவர்களிடம் பேசுங்கள்

அவர்களுக்கும் உங்களுக்கும் இடைவெளி  வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்