You are welcome from

My Hijab

Apart from your own husband, son, granddad, grandson, uncle, nephew, father & brother,

Islam teaches that any other male, to you is a stranger.

 In front of any stranger, full Purdah must be observed

Then your innocence, honour & modesty will be preserved.

Full Purdah entails you to be covered from head to toe,

So that no part of your body is publicly on show. 

Remember that for Purdah, the control of the eyes is a must,

So you save yourself from temptations & lust. 

If on your face you wear a simple veil,

You'll save yourself from being seen by any strange male. 

Women in Islaam are more precious then diamond & gold,

hat's why you mustn't expose yourself, only to be sold.

or a woman to do Purdah is a sign of piety,

And it is also a protection from the filthy society. 

Some girls think it's cool to wear a trouser & shirt, or even a skirt,

Cos they probably think they'll have more chances to flirt. 

 But all that happens is that they get treated like dirt,

And therefore they just end up getting hurt. 

Your body is not something for you to openly show,

Cos if you do, you only make yourself low. 

By covering yourself, you will keep your modesty,

Or else you'll lose your innocence & honesty. 

Covering oneself is a sign of humbleness & humility,

But exposing oneself leads to immorality. 

By observing Purdah a woman keeps her shyness,

So she won't be big-headed and expect to be treated like a Royal Highness. 

Women should always wear a Jilbaab, veil & head scarf,

Cos they are only meant for their other half. 

If you go out, you should be fully covered from head to toe,

Cos when you leave the house, that's the best way to go. 

Purdah is something women should never neglect,

Cos those who don't observe it, lose all self-respect. 

Women who do Purdah and cover their body, head & face,

Will surely be favoured with Allaah's (S.W.T) mercy & grace.  

Islam forbids strange males & females to mingle,

Whether they are married, divorced or single. 

You can only be seen by those who are your Mahram,

So for any stranger to see you, is considered as Haraam. 

One may think its ok to talk to and hang out with ones brother-in-law or cousin,

But this will be more dangerous to your Imaan then poison. 

By observing Purdah, one will remain pure,

And from catching STDs, it is the best cure.

he Shaytaan & Nafs you have to strongly fight,

By making sure you always protect your eyesight. 

When a woman covers herself & hides her beauty,

Then in the eyes of Allaah (S.W.T), she's fulfilling her duty. 

An essential part of Purdah is that one mustn't show their figure,

So it's a must to wear something that's loose or bigger. 

Sadly now-a-days, some sisters do "Purdah" in a way that their body shape is obvious,

But, that kind of "Purdah" is nothing but devious .

The clothes worn for Purdah, shouldn't be see through or tight,

And the design & colour, shouldn't be attractive or bright.   

When wearing Purdah, if people offend or tease,

Then don't care, because it's Allaah (S.W.T) you're trying to please.   

Purdah is Allaah's (S.W.T) command for women to implement,

And not something that should be done as a fashion statement.

Observing Purdah isn't something that should be neglected,

Because it's a means of your Imaan being protected.   

Allaah (S.W.T) and his Prophet (S.A.W) have both said,

That it's Haraam to have a relationship before you get wed.   

So Islaam prohibits going out between girlfriend & boyfriend,

 

Therefore please don't follow this evil kuffaric trend.   

You shouldn't talk to a stranger, unless you have no choice.

But if you have to, don't do so in a sweet soft voice.

A ghayr-mahram man & woman should never be in khalwa anywhere,

Because Shaytaan will then become the 3rd person there.

Islaam teaches that women are to be honoured & respected,

But please lead your life in a way that these remain protected.

The women who don't do Purdah and follow their desire,

Then they run the risk of ending up in hell fire.

You should aim to be like the Ummahaatul Mu'mineen,

Then Inshaa-Allaah it'll become easier to practise on full Deen.

You should try to imitate any of the Sahaabiyyah,

Because they are the most pious group of women to step foot on the Dunyaa.

Always follow the Qur'aan & Sunnah, cos your life in the Dunyaa will be filled with Noor, 

 

Then Inshaa-Allaah in Jannah, you'll be the Queen of all the Hoor.

Written by Br.Ansar

Given by Br.Anvar deen

 

நம் சகோதரிகளை தாய்மார்கள் கவனிக்க வேண்டும்.

நாகர் கோவிலில் மதம் மாறி சுரேஷை திருமணம் செய்த பைரோஸ் என்ற முஸ்லீம் பெண். 

சகோதரிகளே இதேபோண்ற மார்க்கத்துக்கு புறம்பான நிலையில் அல்ல!! 

 ______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

 

கவரிங் நகைகளை பாதுகாக்க ஒரு வழி

 

நாம் எவ்வளவு தான் தங்க நகை வைத்திருந்தாலும் விதவிதமான கவரிங் நகைக்கு பல நூறுகள் செலவு செய்து வாங்கத்தான் செய்கிறோம். ஆடைக்கு ஏற்ற நிறங்களில் கற்கள் வைத்தும், எனாமல் எனப்படும் நிறச் சேர்ப்பு செய்தும் இவை வருவதால் பெண்களிடையே இதுபோன்ற நகைகளுக்கு அதிக மவுசு உண்டு.

அப்படி வாங்கிய கவரிங் நகை சில நாட்களில் கறுக்கத் தொடங்கிவிடும். இதனை வாங்கிய கடையில் கொடுக்கவும் முடியாது, நாம் அணிந்து கொள்ளவும் முடியாது. இப்படி வீணாகிப் போவதைத் தடுக்க ஒரு நல்ல திட்டம் உள்ளது.

புதிதாக கவரிங் நகை வாங்கியவுடன் அதன் மீது நெயில் கலர் நெயில் பாலிஷ் ஒரு கோட்டிங் கொடுக்கவும். அதாவது நிறமில்லாத நெயில்பாலிஷ் வாங்கி அதனை உங்கள் நகை மீது தடவி வைக்கவும்.

இப்படி செய்வதால் நகை தண்ணீரில் பட்டு வெளுத்துப் போவது தவிர்க்கப்படும். எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும். பொதுவாக தங்க நகைகளை விட கவரிங் நகைகளை பத்திரமாக பாதுகாத்தால் அதிக நாட்களுக்கு வைத்திருந்து அணிந்து கொள்ளலாம்.

கவரிங் நகைகளை தங்க நகையுடன் போடாவேக் கூடாது. இது தங்க நகையையும் சேர்த்து பாழாக்கிவிடும். கவரிங் நகையும் கெட்டுப் போகும்.

கவரிங் நகைகளை அணிந்து விட்டு எடுத்து வைக்கும் பொழுது அதனை நன்றாக மெல்லிய காட்டான் துணிவைத்து துடைத்து பாக்ஸில் வைக்கவும்.இப்படி செய்வதால் கவரிங் நகையில் ஊறி இருக்கும் உங்கள் வியர்வை அகற்றப்படும். நகை கருக்காமல் இருக்கும்.

  

ஈஸ்ட்ரோஜன் இழப்பை இயற்கை முறையில் ஈடு கட்டிக்கொள்ளலாம்

ஒருவரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில், ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்களால் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளான கர்ப்பப்பையின் உள்படலம் வெளிவளர்தல், மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் மற்றும் சினைப்பை கட்டிகள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதாலேயே ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில தகவல்கள்

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும்:
பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து காணப்படுகிறது. தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது.

இயற்கை உணவுகள்:
ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகள்:
உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை ஐசோபிளாவின்என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.

நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள்:
ஒமீகா 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த <உணவுகளில் காணப்படுகிறது.

அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
நமது உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:
பெண்களுக்கான ஹார்மோன் களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது.

"சென்ஈஸ்ட்ரோஜன்களை' தவிர்க்க வேண்டும்:
ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' சேருகின்றன என்பதை மறக்கக் கூடாது. எனவே, ஆரோக்கிய உணவு முறை மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

 

 

பெண்களுக்கு உடற்பயிற்சி

 

உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம்.

நாம் அழகாகவே இல்லை,குண்டாக வேறு இருக்கிறோம். நம்மால் அழகாகத் தோற்றம் அளிக்க முடியாது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள், எப்போதுமே பாஸிடிவ் அப்ரோச்தான் எல்லாவற்றிலும் நல்ல பலனை அளிக்கும்.

நம் உடலில் எங்கெங்கு குறையிருக்கோ அதனை நாம் நமது உடற்பயிற்சியின் மூலமும்,மிதமான, அதே சமயம் நாகரிகமான ஒப்பனையின் மூலமும் நிவர்த்தி செய்ய இயலும்.

உடற்பயிற்சி செய்வதனால் அலைபாய்கிற மனம் ஓர் கட்டுக்குள் அடங்குகிறது.இரத்த ஓட்டம் சீராகி,புத்துணர்வு கிடைக்கிறது. உடற்பயிற்சியினால் உடல் கட்டுக்கோப்பாக ஆகிவிட்டாலே மகிழ்ச்சிதான்.இந்த மகிழ்ச்சி தன்னம்பிக்கையை அளித்து அழகூட்டுகிறது.

வியர்வை வெளிப்படுகிற மாதிரி பயிற்சி செய்தாலே முகம் பொலிவு பெற ஆரம்பித்து விடும்.

பயிற்சி செய்து விட்டு விட்டால் குண்டு பெண்மணி ஆகிவிடுவோம் என்று பயப்படும் அவசியம் இல்லை. என்ன இரண்டு கிலோ அதிகமாகும் அவ்வளவுதான்.மீண்டும் நீங்கள் தொடர்ந்தால் சரியாகி விடும்.

உடையைப் பொறுத்தவரை அனைவருக்குமே ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இருப்பது அவசியம்.அனைவருமே ஆடை வாங்குகிறார்கள்.உடுத்திக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே ஆயிரம் பேருக்கு நடுவிலும் அழகு தேவதையாக வலம் வருவார்கள். காரணம் அவர்களிடம் அனைத்தையும் மீறிய ஒருக்ரியேட்டிவ்சென்ஸ்இருக்கும்.அதுதான் அவர்களது ஸ்பெஷாலிட்டியே’.

நம்மாலும் அந்த க்ரியேட்டிவிட்டியை வளர்த்துக் கொள்ள முடியும். எதற்குமே முயற்சிதான் காரணமாகிறது. முயற்சியுடையோர்அதே தான்.

உயரமானவர்களுக்கு கட்டம் போட்டது போலும் , பெரிய பூக்களை உடையது போன்றும் உள்ள ஆடைகள் அழகான தோற்றத்தையும், மிதமான உயரமானவர்களுக்கு அவர்கள் நீண்ட வாகில் கோடுகள் போட்ட ஆடைகளைத் தேர்ந்தெடுப்பார்களேயானால் இன்னும் உயரமாக இருப்பது போன்ற தோற்றம் தரும்.

குள்ளமாக உள்ளவர்களுக்கு நீள வாக்கில் கோடு போட்டதும், சிறு சிறு பூக்களை உடைய ஆடையே அவர்களை உயரமாகக் காண்பிக்கும். குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் போட்டதற்கு முன்னுரிமை அளித்தல் அவர்கள் மிகவும் குள்ளமாகவும், குண்டாகவும் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும்.

கலர் விஷயத்திலும் அப்படியே. கலராக இருப்பவர்களுக்கு லைட்,டார்க் என்று எந்த கலர் ஆடையை வேண்டுமானாலும் அவர்கள் கட்டி அசத்த முடியும்.

மாநிறமாகவும், கருப்பாகவும் உள்ளவர்கள் கலர் விஷயத்தில் கொஞ்சம் கவனம் வைக்க வேண்டும். மிகவும் டார்க் கலரையோ, மிகவும் லைட்டான கலரையோ தெரிவு செய்தல் கூடாது. மிதமான கலராகப் பார்த்து உடுத்தினால் அவர்களும் நல்ல நிறமாக தோற்றம் அளிக்க இயலும்.

உயரமானவர்கள் மெல்லிய ஸ்லிப்பரும், குள்ளமானவர்கள் ஓரளவு ஹீல்ஸ் உள்ள செருப்பையும் அணியலாம். அதிகப்படியான ஹீல்ஸ் முதுகு வலி,இடுப்பு வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தி விட்டு விடும்.

 

நகைகள் பராமரிப்பு

அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்

வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைதத் தவிர்க்கலாம்.

குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்து துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக்கூடாது.

வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து   குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது.

 

உடற்பயிற்சினால் உண்டாகும் நன்மைகள்

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாக கிட்டுகின்றன.

பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும்.

செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.

கை, கால், கணுக்கால், மார்பகம், இடுப்பு ஆகிய இடங்களில் தேவையான அளவு தசைகள் அமையும். கன்னத்திலே தொங்குகின்ற தசை, தோல்களிலே கனத்து தடித்திருக்கின்ற தசை, விலா எலும்புகளுக்குக் கீழே விரிந்து வளர்ந்து அடர்ந்திருக்கின்ற தசை ஆகியன மறையும்.

ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும்.

மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்கள் உருவாகும்; நடையில் நளினம் மலச்சிக்கலைத் தவிர்க்கும். மனத்தை மகிழ வைக்கும்; சுறுசுறுப்போடு இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரும்.

இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலை வளம் பெறச் செய்யும். அடிக்கடி ஏற்படும் தலைவலி அறவே நீங்கும்.

இத்தனைக்கும் மேலாக எடுப்பும், சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து, வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கத் தூண்டும்; நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள், அந்த நல்ல மனம் அமைய வழி வகுக்கும்.

 

 

கர்ப்பிணிகளை சுறுசுறுப்பாக்கும் வாக்கிங்

இன்று எல்லோருமே வாக்கிங் செல்கிறார்கள். சிலர், குழந்தைகளைக்கூட உடன் அழைத்துச் செல்கிறார்கள். கர்ப்பிணிகளும் வாக்கிங் செல்வது நல்லது; அது, அவர்களை சுறுசுறுப்பாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை அளவோடு வாக்கிங் செல்வதுதான் நல்லது. 20 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது அவர்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும், கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல்நிலையை பலப்படுத்தும் என்றும் டிப்ஸ் கொடுக்கின்றனர் டாக்டர்கள்.
கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, அந்த கர்ப்பக்காலத்தின் ஆரம்ப மாதங்களிலும், கடைசி மாதங்களிலும் களைப்பு உடனேயே ஏற்பட்டு விடும். அவ்வாறு களைப்பு ஏற்படும்போது தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது.
சிலர் கூட்டுக்குடும்பமாக வசித்து வரும் நிலையில் இரவில் தூங்க வெகுநேரமாகும் சூழ்நிலை ஏற்படலாம். கர்ப்பக்கால களைப்பின்போது இரவு நேரத்தில் முன்னதாக படுக்கைக்கு செல்வதுதான் நல்லது. அதில், இடைïறுகள் ஏற்படும்பட்சத்தில், வேலையின் இடையே ஒரு மணி நேரமாவது அமைதியாக கால்களை உயரே தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பது நல்லது.
மேலும், தங்களால் முடிந்த வேலைகளை மட்டும் செய்யலாம். களைப்பை ஏற்படுத்தும் வேலைகளை கட்டாயம் செய்யக் கூடாது.
சில பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் மனஇறுக்கம் ஏற்படுவது போன்று இருந்தால், அதில் இருந்து விடுபட மிதமான உடற்பயிற்சிகளை வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காதவாறு செய்யலாம். அல்லது, வாக்மேனில் இசை கேட்டு மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

 

பாலூட்டும் அன்னையர் கவனத்துக்கு

பாலூட்டும் தாய்மார்கள் வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தாய் முடியும் என எச்சரிக்கை செய்துள்ளனர் கனடா நாட்டு மருத்துவர்கள்.

கோடைன் எனப்படும் மருத்துவப் பொருள் அடங்கிய வலி நிவாரணிகளை அதிகம் உட்கொள்வது குழந்தைகளின் உடல் நலத்தைப் பெருமளவில் பாதிப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த வலி நிவாரணிகளை குறிப்பாக பிரசவ கால வலிகளிலிருந்து தப்புவிக்க தாய்மார்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் மருந்தாகும் . அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு இந்த மருத்து அத்தியாவசியத் தேவை என்பது குறிப்பிடத் தக்கது.

பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உணவுப் பழக்கவழக்கம், மருந்து உட்கொள்தல் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துவதுண்டு. ஏனெனில் உடலில் கலக்கும் வேதியல் பொருட்கள் பால் வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்கிறது என்பதே.

தாய்மாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத இந்தப் பொருள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், உறுப்புகள் பாதிப்பு, மயக்கம் போன்ற பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றது என்பதை இந்த ஆய்வு நிரூபித்திருக்கிறது.

தாய்மார்கள் தாங்கள் உட்கொள்ளும் மருந்து குழந்தையின் உடலுக்குள்ளும் பாயும் என்பதை கவனத்தில் கொள்ளவும், தேவையற்ற மருத்துகளைத் தவிர்க்க வேண்டுமெனவும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

தாய்மையின் சிக்கல்கள்

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது ஏன் நிகழ்கிறது என ஆராய்ந்தால் அதற்கும் காரணியாக சமூக ஏற்றத்தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வியும், தரப்படாத சமூக சமத்துவமுமே முன்னால் நிற்கிறது. வளர்ந்த உலக நாடுகளை விட வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே இத்தகைய அவலங்கள் அதிக அளவு நிகழ்கின்றன என்பது ஒன்றே போதும் இந்தக் கருத்தை வலுவூட்ட.

ஆப்பிரிக்கா போன்ற பின் தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவைகள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை. வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்கப் பகுதி உட்பட 35 பின் தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் என்னும் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் மேலைக் கலாச்சாரத்தை மேலாடையாய் கொண்டுள்ள நவீன நகர்ப்புறங்களைத் தவிர்த்தால் இன்னும் கலாச்சாரத்தின் ஆடைகளைத் தரித்துத் திரியும் கிராமத்து மூலைகளில் இத்தகைய விழிப்புணர்வு எழவில்லை என்பதே உண்மை.

உலகெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், கூடவே இரண்டரை கோடி  பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர் எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய்வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. பிற்காலத்தில் தாய்மையடையும் வாய்ப்பைக் கூட இது கணிசமாகக் குறைத்து விடுகிறது.

வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரசு ஈடுபாடு இவை இல்லாவிட்டால் இத்தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் வலியூட்டும் உண்மையாகும்.

காபியும்கருவுறுதலும்

தினமும் நான்கு கோப்பை காபி அருந்தும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு 25 விழுக்காடு குறைகிறது எனும் அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒன்றை டச் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். காபியிலுள்ள காஃபைன் எனும் நச்சுப் பொருளே இதன் காரணம் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.

காஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு ரசாயனப் பொருள் ஆகும். இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து குருதி அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.

தினமும் நான்கு கோப்பை காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அறிவித்து காபி பிரியர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தியுள்ளது இந்த புதிய ஆராய்ச்சி.

காபியில் உள்ள காஃப்பைன் பெண்களின் முட்டையை வலுவிழக்கச் செய்கிறது எனவும், அந்த நச்சுத் தன்மையின் பாதிப்பின் விளைவாக குழந்தையில்லா நிலை கூட ஏற்படலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

குழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர்கள் பட்டியலிடும் புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் எடை என்னும் அதி முக்கிய மூன்று காரணிகளுடன் இப்போது காஃபைன் எனும் விஷப் பொருளும் இணைந்துள்ளது.

கருவுறுதலில் மட்டுமல்ல, தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் காபி குடித்தால் அந்த நச்சுத் தன்மை கருவில் இருக்கும் குழந்தையைக் கூட சென்று தாக்குமாம்.

காபி குடித்துக் கொண்டே தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைக்கும் பெண்கள், வாரம் தோறும் மூன்று கப் மதுவும் அருந்தினால் அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு வெறும் 5 விழுக்காடு தானாம்.

தாய்மையடைவதைத் தடுக்கும் காரணிகளில் புகை பிடித்தல் முதலிடம் பிடிக்கிறது. புகைப்பது குழந்தையின்மைக்கு முக்கிய காரணம், அதன் பிறகு மதுவும், அதிக எடையும், காபியும் வருகின்றன.
காஃபைனினால் நிகழும் விளைவுகளைக் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உதாரணமாக, காஃபைன் உடலிலுள்ள மெலடோனின் அளவை பாதியாகக் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும் இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், காபி குடித்தால் தூக்கம் குறைகிறது.

காபி அருந்துவதால் வரும் இன்னொரு மிகப்பெரிய சிக்கல் அது எலும்புகளின் வலிமையைக் குறைக்கின்றது என்பதாகும். எலும்புகள் வலுவிழப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பு பெருமளவு அதிகரிக்கிறது. குறிப்பாக இந்த ஆஸ்டியோபோரோசிஸ் பெண்களை அதிகம் தாக்கும் என்பது கவனிக்கத் தக்கது.

ஒரு சாதாரண நபருடைய லிவர் நூறு மில்லி காஃபைனை வெளியேற்ற இருபத்து நான்கு மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன. நூறு மில்லி காஃபைன் என்பது எவ்வளவு ? ஒரு கப் காபியில் சுமார் 75 முதல் 200 மில்லி காஃபைன் இருக்கும் என்றால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

காஃபைன் விஷம் பெண்களுக்கு மட்டும் தானா பிரச்சனையைக் கொடுக்கிறது ? காஃபைனுக்கு ஏனிந்த ஓரவஞ்சனை என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. இது ஆண்களையும் பெண்களையும் சம அளவில் பாதிக்கிறது. குறிப்பாக ஆண்களின் உயிர் அணுக்களைப் பாதித்து அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்புகளைக் கூட குறைக்கிறது

காபி குடிக்காமல் என்னால் இருக்கவே முடியாதே ! கொஞ்சம் கூட குடிக்க முடியாதா என அலறும் காபி பிரியர்களை அமைதிப்படுத்த, தினமும் முன்னூறு மில்லிகிராம் காபி என்பது ஆரோக்கியத்துக்கு அதிக ஊறு விளைவிக்காது என்று அறிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

 

இல்லறம் இனிக்க வேண்டுமா?

திருமணமான புதிதில், எல்லாருமே சந்தோஷமா தான் இருக்காங்க. ஓரிரு வருஷம் கழித்து கேட்டால், கல்யாணம் செய்யாமலேயே இருந்திருக்கலாம்; ஏன் தான் கல்யாணம் செய்து கொண்டேனோ? என்று புலம்புபவர்கள் தான் அதிகம். நீங்களும் அப்படி புலம்பித் தவிப்பவரா? கவலையை விடுங்கள். சின்ன சின்ன அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டாலே போதும் உங்கள் பிரச்னை காணாமல் போய்விடும். இல்லறத்தை இனிதாக்க இதோ சில டிப்ஸ் உங்களுக்காக

* உங்கள் கணவரது விருப்பு, வெறுப்புகளை அறிந்து, அதன்படி விட்டுக் கொடுத்து நடந்துங்கோங்க. அவருடைய விருப்பங்களை அலட்சியப்படுத்தாதீங்க. உங்களுக்கு பிடிக்காததா இருந்தாலும், அவருக்கு பிடித்ததை நீங்க ரசிக்கப் பழகிக்கோங்க.

* உங்க கணவர் உங்கள விட அறிவிலோ, கல்வியிலோ, பொருளாதாரத்திலோ குறைவாக இருந்தால், அவரை குறைகூறாதீங்க; மற்றவருடன் ஒப்பிட்டும் பேசாதீங்க.

* உங்க கணவருக்கு தேவையான சிறுசிறு உதவிகளை செய்ய மறக்காதீங்க.

*மத்தவங்க முன்னாடி உங்க கணவரை ஒரு போதும் விட்டுக் கொடுத்துப் பேசாதீங்க.

*கடுமையான வார்த்தையை பேசி காயப்படுத்தாதீங்க; அதுவும் மத்தவங்க முன்னாடி கூடவே கூடாது; கூலான, அன்பான வார்த்தைகளை மட்டுமே பேசுங்க. சந்தோஷமா இருக்கும் போது மட்டுமில்லை, சங்கடமான சமயங்களிலும் பேசணும்.

*நிறைய பேசுங்க, பேசவிடுங்க, பேசுறதை கேளுங்கநீங்க மட்டும் பேசிபேசிப் போரடிக்காம, உங்க கணவர் பேசுவதையும் காதுகொடுத்து கேளுங்க.

*கணவருடன் சண்டை போட்டுட்டு மனக் குமுறலோடு படுக்கைக்குப் போகாதீங்க. படுக்கப் போகும் முன் சண்டையை சுமூகமாக தீர்த்துக்கோங்க.

*முடிந்த வரை இருவரும் சேர்ந்தே சாப்பிடுங்க. அட்லீஸ்ட் தினமும் டின்னர் மட்டுமாவது சேர்ந்து சாப்பிடுங்க.

*உங்க அன்பை, காதலை வெளிக்காட்ட அடிக்கடி கிப்ட்ஸ் கொடுங்கவிசேஷ நாட்கள்ல மட்டுமல்ல; மற்ற நாட்களிலும் கொடுக்கலாமே!

*வீட்டில் பர்ஸ்ட் பிரிபரன்ஸ் உங்க கணவனுக்கு தான் இருக்கணும்; அதுக்கு அப்புறமா தான் குழந்தைங்க கூட.

*நமக்கு தான் வயசு நாற்பதை தாண்டிடுச்சே, இனிமே என்ன இருக்கு என்று நினைக்காம, உங்களோட அழகுல கவனம் செலுத்த மறக்காதீங்க.

*தினமும் இரவில், குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசுங்க. சினிமா, அரசியல் என, உங்களுக்குள் கருத்து வேறுபாடு வராதவரை எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுங்க.

*ஐ லவ் யூ! இந்த வார்த்தையை உங்கள் கணவரிடம் அடிக்கடி சொல்லுங்க. இந்த வார்த்தையோட பவரை புரிஞ்சுப்பீங்க.

*நீங்க தவறு செய்யும் போது, உங்க கணவரிடம் மன்னிப்பு கேட்க தயங்காதீங்க.

*வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக, உங்கள் கணவருடன் எங்காவது டூர் போயிட்டு வாங்க. குழந்தைகள் இருந்தா தாத்தா பாட்டி அல்லது நண்பர்கள் என யாரிடமாவது விட்டுச் செல்லுங்கள். அந்த நாட்களை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை திட்டமிட்டு என்ஜாய் பண்ணுங்க. இப்படியெல்லாம் நீங்க இருந்தா உங்க குடும்பத்துலயாவதுசண்டையாவதுபின் என்ன? வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க. வாழ்க்கை வாழ்வதற்கே!

 

 

பெண்கள் நறுமணத்துடன் வெளியே சுற்றுதல்

எழுதியவர்/பதிந்தவர்/உரை ஜாஃபர் அலி

 

ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாடையை மக்கள் நுகர வேண்டுமென்பதற்காக அவர்களைக் கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள் (அஹ்மத்) என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும் இன்றைய காலத்தில் இது மிக அதிகமாகக் காணப்படுகிறது. சில பெண்கள் இதை எந்த அளவுக்கு அலட்சியமாக, சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள் எனில் வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு தம்முடைய டிரைவர், வியாபாரி, மற்றும் பள்ளிக்கூடத்தின் காவலாளி ஆகியோரின் அருகில் சர்வ சாதாரணமாகச் செல்கின்றனர்.

ஆனால் வாசனைத் திரவியத்தைத் தடவிக் கொண்ட பெண் மீது எந்த அளவு ஷரீஅத் கடுமை காட்டியிருக்கிறதெனில் அத்தகைய பெண் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பினால் - பள்ளிக்குச் செல்வதாக இருந்தாலும் சரி - கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுச் செல்ல வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்தப் பெண் நறுமணம் பூசிக் கொண்டு பிறர் அந்த வாடையை நுகர வேண்டும் என்பதற்காக பள்ளிக்குச் செல்கின்றாளோ அவள் கடமையான குளிப்பைப் போன்று குளிக்காத வரை அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது (அஹ்மத்)

திருமண வைபவங்களும், பெண்கள் நிகழ்ச்சிகளுக்கும் புறப்படும் பெண்கள் புறப்படும் முன் பெண்கள் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தி விட்டுச் செல்கின்றனர். மட்டுமல்ல அதிகம் மணம் கமழக்கூடிய வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு கடை வீதிகளில், வாகனங்களில், ஆண், பெண் கலந்திருக்கும் கூட்டங்களில், சபைகளில், ரமளான் இரவுகளில் பள்ளிகளுக்கும் கூட செல்கின்றனர்!  இது பெண்களின் பாதுகாப்புக்கே ஆபத்தாகி விடுகிறது. தவறான பாதைக்கு கெட்ட ஆண்கள் அழைத்து செல்ல மூல காரணமாகிறது. இதை ஒவ்வொரு கணவனும் தன் குடும்பத்தினருக்கு எடுத்துச்சொல்லி புரிய வைக்க வேண்டும். இதனை நாம் அல்லாஹ்விடம் தான் முறையிட வேண்டியதிருக்கிறது.

பெண்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருள் மணம் உள்ளடங்கியும் நிறம் எடுப்பாகவும் இருக்க வேண்டும் என்று ஷரீஅத்தில் கூறப்பட்டுள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மீது கோபம் கொள்ளாமலும், அறிவீனர்களான ஆண்களோ, பெண்களோ செய்கின்ற குற்றத்துக்காக நல்லோர்களான ஆண்களையும், பெண்களையும் தண்டிக்காமல் இருக்கவும் மேலும் நம் அனைவருக்கும் நேரான வழியை அவன் காட்டவும் நாம் பிரார்த்திப்போமாக!

 

 

தேவைப்படும் படத்தை உங்கள் Mouse ஆல் Right Click செய்து உங்கள் கம்ப்யூடரில் SAVE செய்து பிறகு ZOOM செய்து பார்க்கவும்.

Right click with your mouse and save in your computer, then Zoom and see